செய்திகள்

அபாரமாக பேட்டிங் செய்த பந்துவீச்சாளர்கள்: இந்திய ஏ அணி 562 ரன்கள் குவிப்பு!

DIN

வங்கதேசம் ஏ அணிக்கு எதிரான முதல் அதிகாரபூர்வமற்ற டெஸ்டில் இந்திய ஏ அணி முதல் இன்னிங்ஸில் 562 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்துள்ளது.

இந்திய ஏ அணி வங்கதேசத்துக்குச் சுற்றுப்பயணம் செய்து இரு அதிகாரபூர்வமற்ற டெஸ்டுகளில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் டிரா ஆனது. 2-வது டெஸ்ட் நடைபெற்று வருகிறது. இந்திய ஏ அணியின் தலைமைப் பயிற்சியாளராக செளராஷ்டிர முன்னாள் வீரர் ஷிதான்சு கொடாக்கும் டிராய் கூலி, வேகப்பந்துவீச்சுப் பயிற்சியாளராகவும் டி. திலீப்,ஃபீல்டிங் பயிற்சியாளராகவும் பணியாற்றுகிறார்கள்.

2-வது டெஸ்டில் டாஸ் வென்ற இந்திய ஏ அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமாரின் அபாரமான பந்துவீச்சில் வங்கதேச பேட்டர்கள் தடுமாறினார்கள். ஷஹாதத் ஹுசைன், ஜேக்கர் அலி மட்டும் நன்கு விளையாடி முறையே 80, 62 ரன்கள் எடுத்தார்கள். வங்கதேச ஏ அணி, 80.5 ஓவர்களில் 252 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பெங்காலைச் சேர்ந்த 29 வயது முகேஷ் குமார் 6 விக்கெட்டுகளையும் உமேஷ் யாதவ், ஜெயந்த் யாதவ் தலா 2 விக்கெட்டுகளையும் எடுத்தார்கள்.

இந்திய ஏ அணி, 2-வது நாள் முடிவில் 90 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 324 ரன்கள் எடுத்தது. கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் 144, ஜெயந்த் யாதவ் 4 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். இன்று, அபிமன்யு ஈஸ்வரன், 157 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இந்திய ஏ அணியின் கீழ்நடுவரிசை மற்றும் கீழ்வரிசை பேட்டர்கள் அபாரமாக விளையாடி இந்திய அணி 550 ரன்களைத் தாண்ட உதவினார்கள். ஜெயந்த் யாதவ் 83, செளரப் குமார் 55, நவ்தீப் சைனி 50, முகேஷ் குமார் 23 ரன்கள் எடுத்தார்கள். 

இந்திய ஏ அணி முதல் இன்னிங்ஸில் 147.1 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 562 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

கேரளத்தில் காங்கிரஸை எதிர்த்து போட்டியிடும் இந்திய கம்யூ. -சசி தரூருக்கு கண்டனம்!

தென் இந்தியாவின் உ.பி., தமிழ்நாடு!

பாபா ராம்தேவ் நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு

மஞ்ஞுமல் பாய்ஸ் ரூ.200 கோடி வசூல்!

மீண்டும் 49 ஆயிரத்தைக் கடந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT