செய்திகள்

கால்பந்து உலகக் கோப்பை: காலிறுதிச் சுற்றின் அட்டவணை

8th Dec 2022 11:06 AM

ADVERTISEMENT

 

கத்தார் உலகக் கோப்பைப் போட்டி காலிறுதிச் சுற்றை நெருங்கியுள்ளது. 

பிரேஸில், குரோசியா, ஆர்ஜென்டீனா, நெதர்லாந்து, போர்ச்சுகல், மொராக்கோ, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய அணிகள் காலிறுதிச் சுற்றுக்குத் தகுதியடைந்துள்ளன. 

நாளை முதல் (டிசம்பர் 9) காலிறுதிச் சுற்று தொடங்குகிறது. பிரேஸில் - குரோசியா, ஆர்ஜென்டீனா - நெதர்லாந்து ஆகிய அணிகள் நாளையும் அடுத்த நாள் போர்ச்சுகல் - மொராக்கோ, பிரான்ஸ் - இங்கிலாந்து ஆகிய அணிகளும் மோதுகின்றன.  டிசம்பர் 13, 14 தேதிகளில் அரையிறுதிச் சுற்றும் டிசம்பர் 18 அன்று இறுதிச் சுற்றும் நடைபெறவுள்ளன. டிசம்பர் 17 அன்று 3-வது இடத்துக்கான ஆட்டம் நடைபெறுகிறது.

ADVERTISEMENT

கத்தார் உலகக் கோப்பை: காலிறுதிச் சுற்று (இந்திய நேரம்)

டிசம்பர் 9

பிரேஸில் - குரோசியா (இரவு 8.30 மணி) 
ஆர்ஜென்டீனா - நெதர்லாந்து (நள்ளிரவு 12.30 மணி)

டிசம்பர் 10

போர்ச்சுகல் - மொராக்கோ (இரவு 8.30 மணி) 
பிரான்ஸ் - இங்கிலாந்து (நள்ளிரவு 12.30 மணி)

ADVERTISEMENT
ADVERTISEMENT