செய்திகள்

சென்னை சேப்பாக்கத்தில் ஆஸிக்கு எதிரான ஒருநாள் ஆட்டம்: பிசிசிஐ அறிவிப்பு

DIN

2023 ஜனவரி முதல் மார்ச் வரை இந்தியாவில் நடைபெறவுள்ள சர்வதேச ஆட்டங்களின் அட்டவணையை வெளியிட்டுள்ளது பிசிசிஐ.

இந்திய கிரிக்கெட் அணியின் வங்கதேச சுற்றுப்பயணம் டிசம்பர் 26 அன்று நிறைவுபெறுகிறது. இதன்பிறகு இந்திய அணி இந்தியாவில் 9 ஒருநாள், 6 டி20, 4 டெஸ்டுகளில் விளையாடவுள்ளது.

2023 ஜனவரி 3 முதல் ஜனவரி 15 வரை இலங்கைக்கு எதிராக 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களிலும் ஜனவரி 18 முதல் பிப்ரவரி 1 வரை நியூசிலாந்துக்கு எதிராக 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களிலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பிப்ரவரி 9 முதல் மார்ச் 22 வரையும் 4 டெஸ்டுகள், 3 ஒருநாள் ஆட்டங்களிலும் இந்திய அணி விளையாடவுள்ளது. 

இந்த அனைத்து ஆட்டங்களிலும் கடைசியாக நடைபெறவுள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட், சென்னையில் நடைபெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் அந்த வாய்ப்பு வழங்கப்படவில்லை.  இதனால் ரசிகர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளார்கள். 

இலங்கைக்கு எதிரான 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்கள்

முதல் டி20: ஜனவரி 3, மும்பை
2-வது டி20: ஜனவரி 5, புணே
3-வது டி20: ஜனவரி 7, ராஜ்கோட்

முதல் ஒருநாள்: ஜனவரி 10, குவாஹாட்டி
2-வது ஒருநாள்: ஜனவரி 12, கொல்கத்தா
3-வது ஒருநாள்: ஜனவரி 15, திருவனந்தபுரம் 

நியூசிலாந்துக்கு எதிரான 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்கள்

முதல் டி20: ஜனவரி 18, ஹைதராபாத் 
2-வது டி20: ஜனவரி 21, ராய்பூர்
3-வது டி20: ஜனவரி 24, இந்தூர்

முதல் ஒருநாள்: ஜனவரி 27, ராஞ்சி
2-வது ஒருநாள்: ஜனவரி 29, லக்னெள
3-வது ஒருநாள்: பிப்ரவரி 1, ஆமதாபாத்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 டெஸ்ட், 3 ஒருநாள் ஆட்டங்கள் 

முதல் டெஸ்ட்: பிப்ரவரி 9-13, நாகபுரி
2-வது டெஸ்ட்: பிப்ரவரி 17-21, தில்லி
3-வது டெஸ்ட்: மார்ச் 1-5, தர்மசாலா
4-வது டெஸ்ட்: மார்ச் 9-13, ஆமதாபாத் 

முதல் ஒருநாள்: மார்ச் 17, மும்பை
2-வது ஒருநாள்: மார்ச் 19, விசாகப்பட்டினம் 
3-வது ஒருநாள்: மார்ச் 22, சென்னை
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

புதிய கூட்டணியில் குக் வித் கோமாளி சீசன் -5: முன்னோட்டக் காட்சி வெளியானது!

யாருக்கு வாக்களிக்க வேண்டும்? வைரலாகும் விஜய் சேதுபதி விடியோ!

மத்திய அமைச்சர் பசுபதி பராஸ் ராஜிநாமா!

கேரளத்தில் வாகனப் பேரணியில் பிரதமர் மோடி!

கேரளத்தில் காங்கிரஸை எதிர்த்து போட்டியிடும் இந்திய கம்யூ. -சசி தரூருக்கு கண்டனம்!

SCROLL FOR NEXT