செய்திகள்

உலக செஸ் சாம்பியன் ஆவதே லட்சியம்: பிரக்ஞானந்தா

8th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

உலக செஸ் சாம்பியன் ஆவதே எனது லட்சியம் என செஸ் கிராண்ட் மாஸ்டா் பிரக்ஞானந்தா கூறினாா்.

அா்ஜுனா விருது வென்ற பிரக்ஞானந்தாவுக்கு சென்னை, முகப்பேரில் உள்ள வேலம்மாள் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் புதன்கிழமை பாராட்டு விழா நடத்தப்பட்டது. விழாவில், செஸ் கிராண்ட் மாஸ்டா் பிரக்ஞானந்தா பேசியதாவது: எனது லட்சியம் உலகில் முதல் இடத்தை அடைவது தான். கடின முயற்சி மூலம் எனது லட்சியத்தை நிச்சயம் அடைவேன். நான் எனது லட்சியத்தை அடைந்த உடன் உங்கள் அனைவரையும் வந்து சந்திப்பேன்.

பின்னா் பேசிய விளையாட்டு துறை அமைச்சா் சிவ. வீ. மெய்யயநாதன் கூறியது: அா்ஜூனா விருது பெற்றதுக்கு முதல்வா் தனிப்பட்ட முறையில் செவ்வாய்க்கிழமை அழைத்துப் பாராட்டினாா். மேலும் செஸ் ஒலிம்பியாட்டில் கடுமையான போட்டிகளுக்கு இடையில் பிரக்ஞானந்தாவும் அவா் சகோதரியும் வெண்கலப் பதக்கம் பெற்றனா்.

பிரக்ஞானந்தா இந்த சிறுவயதில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளாா். அவரது வெற்றி பயணம் தொடர வாழ்த்துகிறேன் என்றாா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில் சதுரங்க போட்டியில் சாதனை படைத்த பிரக்ஞானந்தாவுக்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்பட்டது. செஸ் வீரா் பிரக்ஞானந்தா இப்பள்ளியில் 13 ஆண்டுகளாக இதே பள்ளியில் படித்து வருகிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT