செய்திகள்

துளிகள்...

8th Dec 2022 02:25 AM

ADVERTISEMENT

• புரோ கபடி லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ் - யு.பி. யோதாஸையும் (43-28), பெங்களூரு புல்ஸ் - பாட்னா பைரேட்ûஸயும் (57-44) புதன்கிழமை வென்றன. 
• ஆஸ்திரேலியா - மேற்கிந்தியத் தீவுகள் மோதும் 2-ஆவது டெஸ்ட் அடிலெய்டில் வியாழக்கிழமை (டிச. 8) தொடங்குகிறது. 
• சென்னையில் நடைபெறும் தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பில் தமிழகத்தின் நவனீத் பிரபு காலிறுதிக்கு முன்னேற, ரவுண்ட் ஆஃப் 16-இல் கனவ் நானாவதி தோல்வியைத் தழுவினார்.  
• தேசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில் 50 மீட்டர் பிஸ்டல் பிரிவில் பஞ்சாபின் அர்ஜுன் சிங் சீமா (ஆடவர்), மகாராஷ்டிரத்தின் ஷீத்தல் பிரீத்தம் தேசாய் (மகளிர்) சாம்பியன் ஆகினர். 
• உலக டூர் ஃபைனல்ஸ் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் ஹெச்.எஸ். பிரணாய் தொடக்க சுற்றிலேயே 11-21, 21-9, 17-21 என ஜப்பானின் கொடாய் நராவ்காவிடம் தோல்வியைத் தழுவினார். 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT