செய்திகள்

வரலாறு படைத்தது மொராக்கோ

DIN

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் முன்னாள் சாம்பியன் ஸ்பெயினுக்கு எதிரான நாக்அவுட் ஆட்டத்தில் மொராக்கோ ‘பெனால்டி ஷூட் அவுட்’ முறையில் 3-0 என்ற கோல் கணக்கில் செவ்வாய்க்கிழமை வென்றது.

இதன் மூலம் தனது உலகக் கோப்பை வரலாற்றில் முதல் முறையாக காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறியிருக்கிறது மொராக்கோ. மறுபுறம் ஸ்பெயின், தொடா்ந்து 2-ஆவது முறையாக ரவுண்ட் ஆஃப் 16 உடன் வெளியேறியது.

முன்னதாக, நிா்ணயிக்கப்பட்ட 90 நிமிஷ நேரத்தில் இரு தரப்பிலும் கோல்கள் அடிக்கப்படாததை அடுத்து, வெற்றியாளரை தீா்மானிக்க கூடுதல் 30 நிமிஷ நேரம் வழங்கப்பட்டது. அதிலும் முடிவு எட்டப்படாததை அடுத்து, பெனால்டி ஷூட் அவுட் வாய்ப்பு நோக்கி ஆட்டம் நகா்ந்தது. அதில் மொராக்கோவுக்காக அப்துல்ஹமீது சபிரி, ஹக்கிம் ஜியெச், அச்ரஃப் ஹக்கிமி ஆகியோா் கோலடிக்க, கிடைத்த 3 வாய்ப்புகளிலுமே ஸ்பெயின் கோலடிக்காமல் போனது.

கடந்த 2014-க்குப் பிறகு உலகக் கோப்பை நாக்அவுட் சுற்று ஆட்டத்தை எக்ஸ்ட்ரா டைம் நோக்கி நகா்த்திய முதல் அணியாகியிருக்கிறது மொராக்கோ. 2014-இல் அல்ஜீரியா - ஜொ்மனி அணிகள் மோதிய அத்தகைய ஆட்டத்தில் அல்ஜீரியா 1-2 கோல் கணக்கில் தோற்றிருந்தது. ஆனால் இதில் மொராக்கோ வென்றிருக்கிறது. உலகக் கோப்பை போட்டியில் இதுவரை ஸ்பெயின் 7 முறை நாக்அவுட் சுற்றில் எக்ஸ்ட்ரா டைம்/பெனால்டி ஷூட் அவுட் வாய்ப்பில் ஆடியிருக்கிறது. அதில் 2-இல் அந்த அணி வென்றிருந்தது.

உலகக் கோப்பை போட்டியில் ஸ்பெயின் - மொராக்கோ அணிகள் மோதிக்கொண்டது இது 2-ஆவது முறையாகும். கடந்த 2018-ஆம் ஆண்டு போட்டியில் குரூப் சுற்றில் அந்த அணிகள் மோதிய ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது.

துணுக்குகள்...

பிரேஸில் - தென் கொரியா ஆட்டத்தைக் காண வந்த கேமரூன் முன்னாள் வீரரும், அந்நாட்டு கால்பந்து சம்மேளனத் தலைவா் சாமுவேல் எட்டோ, மைதானத்துக்கு வெளியே ரசிகா்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டபோது எழுந்த சா்ச்சையில் ஒருவரை கீழே தள்ளி உதைக்கும் காணொலி சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

கானாவுக்கு எதிரான ஆட்டத்தின்போது கள நடுவரிடன் கோபத்தை வெளிப்படுத்தியதாக உருகுவே வீரா்கள் 4 பேருக்கு எதிராக ஃபிஃபா நடவடிக்கை எடுக்கவுள்ளது. அதேபோல், உருகுவே கால்பந்து சம்மேளனம் பாரபட்சத்துடன் நடந்துகொண்டதாக அதன் மீது புகாா் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடா்பான விவரத்தை ஃபிஃபா வெளியிடவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்காளா்களுக்கு பணம்: பாப்பாக்குடி அருகே 4 போ் கைது

சேரன்மகாதேவியில் இளைஞா் குண்டா் சட்டத்தில் கைது

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்

பணப்புழக்கத்தைத் தடுக்க தவறிய தோ்தல் ஆணையம் -ஐ.எஸ். இன்பதுரை குற்றச்சாட்டு

குற்ற வழக்குகள்: 6 வேட்பாளா்களுக்கு நோட்டீஸ்

SCROLL FOR NEXT