செய்திகள்

உலகக் கோப்பை: அதிர்ச்சியளித்த மொராக்கோ, போர்ச்சுகல் கோல் மழை! (விடியோ)

DIN

கத்தாரில் நடைபெற்று வரும் கால்பந்து உலகக் கோப்பைப் போட்டியில் போர்ச்சுகலும் மொராக்கோவும் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

பெனால்டி ஷூட் அவுட் வழியாக பலம் வாய்ந்த அணியான ஸ்பெயினை 3-0 என வீழ்த்தி முதல்முறையாகக் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது மொராக்கோ அணி. 2010-ல் உலகக் கோப்பையை வென்ற ஸ்பெயின் அணி, யூரோ 2020 போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறியது. எனினும் பெனால்டியில் ஸ்பெயின் வீரர்கள் ஏமாற்றமளித்தார்கள். 2018-லும் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பெனால்டி வழியாக ஸ்பெயினை ரஷியா தோற்கடித்தது.     

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போர்ச்சுகல் - ஸ்விட்சர்லாந்து ஆட்டத்தில் கோல் மழை பொழிந்துவிட்டார்கள் போர்ச்சுகல் வீரர்கள். 21 வயது ராமோஸின் ஹாட்ரிக் கோல்களால் 6-1 என ஸ்விட்சர்லாந்தை வீழ்த்தியது போர்ச்சுகல் அணி. 1958-ல் பீலே அடித்த 3 கோல்களுக்குப் பிறகு நாக் அவுட் ஆட்டத்தில் 3 கோல்கள் அடித்த இளம் வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் ராமோஸ். 

டிசம்பர் 10 அன்று போர்ச்சுகல் - மொராக்கோ அணிகளுக்கு இடையிலான காலிறுதி ஆட்டம் நடைபெறவுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

SCROLL FOR NEXT