செய்திகள்

இன்று யாருக்கெல்லாம் பிறந்தநாள்? ஷ்ரேயஸ் ஐயரின் மீம்!

6th Dec 2022 06:23 PM

ADVERTISEMENT

இந்திய கிரிக்கெட் அணியில் இன்று 4 வீரர்களுக்கு பிறந்தநாள் என்பதை ஷ்ரேயஸ் ஐயர் பதிவிட்ட ஸ்பைடர்மேன் மீம் வைரலாகி வருகிறது. 

இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசம் சுற்றுப்பயணம் சென்று விளையாடி வருகிறது. 3 ஒருநாள் போட்டிகள், 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. முதல் ஒருநாள் போட்டியில் வங்கதேசம் த்ரில் வெற்றி பெற்றது. 2வது ஒருநாள் போட்டி நாளை காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. 

இந்நிலையில் இன்று பிறந்தநாள் காணும் ஷ்ரேயஸ் ஐயர் ஷிகர் தவானுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்பைடர்மேன் மல்டிவர்ஸ் புகைப்படத்தினை பதிவிட்டு அதில் இன்று யாருக்கெல்லாம் பிறந்தநாள் என்பதை டேக் செய்து இருந்தார். இன்று ஷ்ரேயஸ் ஐயர் உட்பட 4 வீரர்களுக்கு பிறந்தநாள். ஜடேஜா, பும்ரா, கருண் நாயர் ஆகியோருக்கு. ஆனால் இந்த மூவரும் வங்கதேச சுற்றுப்பயணத்தில் தேர்வாகவில்லை. ஒரே நாளில் இத்தனைப் பேருக்கு பிறந்தநாளா என ரசிகர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர். 

ADVERTISEMENT

ஷிகர் தவானுக்கு நேற்று (டிச.5) பிறந்தநாள். அவர் மட்டுமே தற்போதைக்கு அணியில் உள்ளார். அதனால் அவர்கள் இருவரும் கேக் வெட்டி இந்திய அணியினருடன் கொண்டாடினர். 


 

ADVERTISEMENT
ADVERTISEMENT