செய்திகள்

வங்கதேச ஏ அணிக்கு எதிராக 6 விக்கெட்டுகள் எடுத்த முகேஷ் குமார்

DIN

இந்திய ஏ அணிக்கு எதிரான 2-வது அதிகாரபூர்வமற்ற டெஸ்டில் வங்கதேச ஏ அணி, 252 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 

இந்திய ஏ அணி வங்கதேசத்துக்குச் சுற்றுப்பயணம் செய்து இரு அதிகாரபூர்வமற்ற டெஸ்டுகளில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் டிரா ஆனது. 2-வது டெஸ்ட் இன்று தொடங்கியுள்ளது. இந்திய ஏ அணியின் தலைமைப் பயிற்சியாளராக செளராஷ்டிர முன்னாள் வீரர் ஷிதான்சு கொடாக்கும் டிராய் கூலி, வேகப்பந்துவீச்சுப் பயிற்சியாளராகவும் டி. திலீப்,ஃபீல்டிங் பயிற்சியாளராகவும் பணியாற்றுகிறார்கள்.

இந்நிலையில் 2-வது டெஸ்டில் டாஸ் வென்ற இந்திய ஏ அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமாரின் அபாரமான பந்துவீச்சில் வங்கதேச பேட்டர்கள் தடுமாறினார்கள். ஷஹாதத் ஹுசைன், ஜேக்கர் அலி மட்டும் நன்கு விளையாடி முறையே 80, 62 ரன்கள் எடுத்தார்கள். வங்கதேச ஏ அணி, 80.5 ஓவர்களில் 252 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பெங்காலைச் சேர்ந்த 29 வயது முகேஷ் குமார் 6 விக்கெட்டுகளையும் உமேஷ் யாதவ், ஜெயந்த் யாதவ் தலா 2 விக்கெட்டுகளையும் எடுத்தார்கள். டி20 உலகக் கோப்பைக்கு முன்பு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு முகேஷ் குமார் தேர்வானார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்விட்சர்லாந்தில் பிரியங்கா சோப்ரா!

”மீண்டும் தேர்தல் பத்திரங்கள்” நிர்மலா சீதாராமன் வாக்குறுதி -காங். கண்டனம்

புன்னகைக்கும் ஈஷா ரெப்பா - புகைப்படங்கள்

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

டி20 உலகக் கோப்பையில் விளையாட 100 சதவீதம் தயாராக உள்ளேன்: தினேஷ் கார்த்திக்

SCROLL FOR NEXT