செய்திகள்

டெஸ்ட் தொடர்: பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் விலகல்!

6th Dec 2022 05:52 PM

ADVERTISEMENT

 

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து பிரபல பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராஃப் விலகியுள்ளார்.

பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்டுகளில் விளையாடுகிறது இங்கிலாந்து அணி. ராவல்பிண்டியில் நடைபெற்ற முதல் டெஸ்டில் வரலாற்று வெற்றியை அடைந்து டெஸ்ட் தொடரில் 1-0 என இங்கிலாந்து அணி முன்னிலை பெற்றுள்ளது.

பிரபல பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராஃப் 15 ஒருநாள், 57 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். முதல் டெஸ்டில் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அறிமுகமானார் ஹாரிஸ் ராஃப். அந்த டெஸ்டில் ஃபீல்டிங் செய்தபோது அவருக்குக் காயம் ஏற்பட்டது. இதையடுத்து காயம் தீவிரமாக உள்ளதால் டெஸ்ட் தொடரிலிருந்து ஹாரிஸ் ராஃப் விலகியுள்ளார். முதல் டெஸ்டில் 13 ஓவர்கள் வீசி 78 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் எடுத்தார்.

ADVERTISEMENT

2-வது டெஸ்ட் டிசம்பர் 9 அன்று தொடங்குகிறது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT