செய்திகள்

கால்பந்து உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்கும் தீபிகா படுகோன்!

6th Dec 2022 05:39 PM

ADVERTISEMENT

 

டிசம்பர் 18 அன்று இறுதிச்சுற்று தொடங்குவதற்கு முன்பு கால்பந்து உலகக் கோப்பையை நடிகை தீபிகா படுகோன் அறிமுகப்படுத்தவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக் கோப்பை கால்பந்து போட்டி ஃபிஃபா சர்வதேசக் கால்பந்து கூட்டமைப்பால் நடத்தப்படுகிறது. ஃபிஃபா 21-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2018-ல் ரஷியாவில் முதல்முறையாக நடைபெற்றது. தரவரிசையில் 7-வது இடத்தில் இருந்த பிரான்ஸ் அணி உலகக் கோப்பையை வென்றது. குரோஷியாவை 4-2 என்ற கோல் கணக்கில் வென்றது. 2026-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்துவதற்கான வாய்ப்பை அமெரிக்கா, மெக்ஸிகோ, கனடா நாடுகள் பெற்றுள்ளன. இப்போட்டியில் 48 நாடுகள் பங்கேற்கின்றன.

2022 கால்பந்து உலகக் கோப்பைப் போட்டி கத்தாரில் நவம்பர் 20 முதல் டிசம்பர் 18 வரை நடைபெறுகிறது. 

ADVERTISEMENT

டிசம்பர் 18 அன்று லுசெயில் மைதானத்தில் இறுதிச்சுற்று நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்த ஆட்டம் தொடங்குவதற்கு முன்பு கால்பந்து உலகக் கோப்பையை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தவுள்ளார் பிரபல இந்திய நடிகை தீபிகா படுகோன். இதற்காக கத்தாருக்கு விரைவில் செல்லவுள்ளார். உலகில் அதிக ரசிகர்களால் பார்க்கப்படும் கால்பந்து உலகக் கோப்பைப் போட்டியில் இந்தப் பெருமையைப் பெறும் முதல் திரைப்பட நட்சத்திரம் என்கிற பெருமையை அடையவுள்ளார் தீபிகா படுகோன். 

ஷாருக் கானுடன் தீபிகா படுகோன் இணைந்து நடித்துள்ள பதான் படம், ஜனவரி 25 அன்று வெளியாகவுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT