செய்திகள்

டாடா ஸ்டீல் செஸ்: தமிழக வீராங்கனை வைஷாலி சாம்பியன்

5th Dec 2022 06:05 PM

ADVERTISEMENT

 

டாடா ஸ்டீல் செஸ் இந்தியா 2022 மகளிர் பிளிட்ஸ் போட்டியை தமிழகத்தைச் சேர்ந்த ஆர். வைஷாலி வென்றுள்ளார்.

18 ஆட்டங்களில் 13.5 புள்ளிகளுடன் ஆர். வைஷாலி இப்போட்டியில் முதலிடம் பிடித்தார். மற்ற இந்திய வீராங்கனைகளான ஹரிகா 3-ம் இடத்தையும் ஹம்பி 5-ம் இடத்தையும் பெற்றார்கள். ஆடவர் பிரிவில் இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி முதலிடம் பிடித்தார். 

சென்னை செஸ் ஒலிம்பியாடில் 11 ஆட்டங்களில் 5 வெற்றி, ஒரு தோல்வி, 5 டிரா என நன்றாக விளையாடி இந்திய ஏ அணியின் முக்கிய வீராங்கனையாக இருந்தார் வைஷாலி. ஒலிம்பியாடில் இந்திய மகளிர் அணி வெண்கலம் வென்றது. தனிநபர் பிரிவில் வைஷாலிக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது. 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT