செய்திகள்

முதல் டெஸ்டிலேயே காயமடைந்து நாடு திரும்பும் பிரபல இங்கிலாந்து வீரர்!

5th Dec 2022 03:51 PM

ADVERTISEMENT

 

பிரபல இங்கிலாந்து வீரர் லியம் லிவிங்ஸ்டன், இங்கிலாந்து அணிக்காக 12 ஒருநாள், 29  டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.

62 முதல்தர ஆட்டங்களில் விளையாடியுள்ள லிவிங்ஸ்டன், பாகிஸ்தானுக்கு எதிரான ராவல்பிண்டி டெஸ்டில் அறிமுகமானார். முதல் இன்னிங்ஸில் 9 ரன்களும் 2-வது இன்னிங்ஸில் 7 ரன்களும் எடுத்தார். 

2-வது நாளன்று பாகிஸ்தான் இன்னிங்ஸில் ஃபீல்டிங் செய்தபோது கால் முட்டியில் அவருக்குக் காயம் ஏற்பட்டது. இதனால் பாகிஸ்தான் இன்னிங்ஸ் முழுக்க அவர் ஃபீல்டிங் செய்ய வரவில்லை. இங்கிலாந்தின் 2-வது இன்னிங்ஸில் மிகுந்த சிரமத்துடன் ஓடி ரன்கள் எடுத்தார். 

ADVERTISEMENT

இந்நிலையில் காயம் தீவிரமாக உள்ளதால் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து லிவிங்ஸ்டன் விலகியுள்ளார். இங்கிலாந்துக்கு நாளை திரும்பும் லிவிங்ஸ்டன் மருத்துவச் சிகிச்சை மேற்கொள்ளவுள்ளார். 

வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் அதிரடி வீரராகப் பெயர் பெற்ற 29 வயது லிவிங்ஸ்டன், டெஸ்ட் கிரிக்கெட்டிலும் முத்திரை பதிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் முதல் டெஸ்டிலேயே காயம் ஏற்பட்டு, டெஸ்ட் தொடரிலிருந்து அவர் விலகியுள்ளார். எனினும் மற்ற அணிகளை விடவும் அதிக டெஸ்டுகளில் விளையாடும் ஓர் அணி இங்கிலாந்து. இதனால் காயத்திலிருந்து குணமாகி டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அவர் மீண்டும் திரும்புவார் என எதிர்பார்க்கலாம். 

Tags : Livingstone
ADVERTISEMENT
ADVERTISEMENT