செய்திகள்

உலகக் கோப்பை: காலிறுதிக்குத் தகுதி பெற்ற இரு அணிகள்! (கோல்களின் விடியோ)

5th Dec 2022 11:55 AM

ADVERTISEMENT

 


கத்தாரில் நடைபெற்று வரும் கால்பந்து உலகக் கோப்பைப் போட்டியில் பிரான்ஸும் இங்கிலாந்தும் காலிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன.

நேற்று நடைபெற்ற ஆட்டங்களில் பிரான்ஸ் அணி 3-1 என போலந்தையும் இங்கிலாந்து அணி 3-0 என செனகலையும் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளன. 

சனிக்கிழமையன்று நடைபெறும் காலிறுதியில் பிரான்ஸ் - இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன. பிரான்ஸுக்கு எதிராகக் கடைசியாக விளையாடிய 8 ஆட்டங்களில் ஒரு ஆட்டத்தில் மட்டுமே இங்கிலாந்து வென்றுள்ளது. 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT