செய்திகள்

முதல் டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி! 

5th Dec 2022 07:43 PM

ADVERTISEMENT

பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்டுகளில் விளையாடுகிறது இங்கிலாந்து அணி. முதல் டெஸ்டில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. பாகிஸ்தானில் 17 வருடங்களுக்குப் பிறகு டெஸ்டில் விளையாடும் இங்கிலாந்து அணிக்கு அற்புதமான தொடக்கம் கிடைத்தது. முதல் ஓவரிலேயே 14 ரன்கள் எடுத்தார்கள்.

முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 657 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய பாகிஸ்தான் அணி 579 ரன்கள் எடுத்தது. இரண்டாம் இன்னிங்ஸில் இங்கிலாந்து 264 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. இதில் அதிகபட்சமாக ஹாரி புரூக் 87 ரன்களும், ஜோ ரீட் 73 ரன்களும், ஜாக் கிராவ்லி 50 ரன்களும் எடுத்தனர். 

வெற்றி பெற 343 ரன்கள் தேவையான நிலையில் இரண்டாம் இன்னிங்ஸில் ஆடிய பாகிஸ்தான் அணி 268 ரன்களுக்கு மொத்த விக்கெட்டுகளையும் இழந்தது. பாகிஸ்தானில் அதிகபட்சமாக சவுத் ஷகீல் 76 ரன்களும், இமாம் உல் ஹக் 48 ரனகளும், அசார் அலி 40 ரன்களும், ரிஸ்வான் 46 ரன்களும் எடுத்தனர். 

இங்கிலாந்து அணியில் ஜேம்ஸ் ஆண்டர்சன், ராபின்சன் தலா 4 விக்கெட்டுகளை எடுத்தனர். பென் ஸ்டோக்ஸ், ஜாக் லீச் தலா 1 விக்கெட்டுகளை எடுத்தனர். இதன் மூலம் 74 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது இங்கிலாந்து. 

ADVERTISEMENT

ஆட்ட நாயகனாக ராபின்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT