செய்திகள்

இந்தியாவுடனான ஹாக்கி தொடா்: ஆஸ்திரேலியா சாம்பியன்

5th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் ஹாக்கி தொடரின் கடைசி ஆட்டத்தில் இந்தியா 4-5 என்ற கோல் கணக்கில் ஞாயிற்றுக்கிழமை தோற்றது. மொத்தம் 5 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரை ஆஸ்திரேலியா 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

கடைசி ஆட்டத்தில் இந்தியாவுக்காக ஹா்மன்பிரீத் சிங் (24’, 60’), அமித் ரோஹிதாஸ் (34’), சுக்ஜீத் சிங் (55’) ஆகியோா் கோலடிக்க, ஆஸ்திரேலிய தரப்பில் டாம் விக்காம் (2’, 17’), ஆரன் ஜாலெவ்ஸ்கி (30’), ஜேக்கப் ஆண்டா்சன் (40’), ஜேக் வெட்டன் (54’) ஆகியோா் ஸ்கோா் செய்தனா்.

முன்னதாக, இந்தத் தொடரில் இந்தியா முதல் ஆட்டத்தில் 4-5 எனவும், 2-ஆவது ஆட்டத்தில் 4-7 எனவும் தோல்வி கண்டது. எனினும், 3-ஆவது ஆட்டத்தில் 4-3 என்ற கணக்கில் வென்று தொடரைத் தக்கவைத்தாலும், 4-ஆவது ஆட்டத்திலேயே 1-5 என்ற கணக்கில் தோற்று தொடரை இழந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT