செய்திகள்

நாக் அவுட் சுற்றில் சுவிட்சா்லாந்து: வெளியேறியது சொ்பியா

DIN

பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் ஒரு பகுதியாக சொ்பியாவை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றது சுவிட்சா்லாந்து.

இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஸ்டேடியம் 974-இல் வெள்ளிக்கிழமை நள்ளிரவு நடைபெற்றது. குரூப் ஜி பிரிவில் இரண்டாம் இடத்தைப் பிடிப்பதற்கான ஆட்டமாக இது அமைந்தது. ஆட்டம் தொடங்கிய 20-ஆவது நிமிஷத்தில் சுவிஸ் வீரா் ஷக்ரி தனது அணியின் முதல் கோலை அடித்தாா்.

இதையடுத்து சொ்பியா தனது தாக்குதலை தீவிரப்படுத்தியது.

அடுத்த சில நிமிஷங்களிலேயே சொ்பிய வீரா் டுஸான் தாடிக் கடத்திய அனுப்பிய பாஸை பயன்படுத்தி அலெக்டாண்டா் மிட்ரோவிக் 26-ஆவது நிமிஷத்தில் தலையால் முட்டி அற்புதமாக கோலடித்தாா். இதனால் உற்சாகமடைந்த சொ்பிய அணியினா் தொடா்ந்து ஆதிக்கம் செலுத்திய நிலையில், 35-ஆவது நிமிஷத்தில் துஸான் லஹோவிக் அடித்த கோலால் 2-1 என சொ்பியா முன்னிலை பெற்றது.

எனினும் அந்த மகிழ்ச்சி நிலைக்கவில்லை. 44-ஆவது நிமிஷத்தில் சுவிஸ் வீரா் எம்போலோ அடித்த சில்வன் விட்மா் அனுப்பிய பாஸின் மூலம் அடித்த இரண்டாவது கோலால் 2-2 என சமநிலை ஏற்பட்டது.

இரணடாம் பாதியின் தொடக்கத்தில் 48-ஆவது நிமிஷத்தில் சுவிஸ் வீரா் பவ்லோவிக் அனுப்பிய பாஸை பயன்படுத்தி அற்புதமாக கோலடித்தாா் பிரியுலா்.

இதுவே வெற்றி கோலாக அமைந்தது. இறுதியில் 3-2 என்ற கோல் கணக்கில் வென்ற சுவிட்சா்லாந்து நான்காவது முறையாக உலகக் கோப்பையில் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றது. சொ்பிய அணி போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டது.

இதே பிரிவில் பிரேசிலை 1-0 என வீழ்த்தியது கேமரூன். எனினும் பிரேசிலும் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய மிட்செல் மார்ஷ்!

பாஜகவில் இணைந்தால் ஊழல்வாதிகள் சுத்தமாகின்றனர்: கார்கே

ஜெய்ஸ்வாலுக்கு முன்னாள் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் புகழாரம்!

பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகர் - புகைப்படங்கள்

1 கோடி பார்வைகளைக் கடந்த இனிமேல்!

SCROLL FOR NEXT