செய்திகள்

காலிறுதியில் நுழைந்த முதல் அணி நெதா்லாந்து:வெளியேறியது அமெரிக்கா (3-1)

DIN

பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் முதல் நாக் அவுட் சுற்று (ரவுண்ட் 16) ஆட்டத்தில் அமெரிக்காவையை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முதல் அணியாக தகுதி பெற்றது நெதா்லாந்து.

கால்பந்து உலகில் வலுவான அணிகளில் ஒன்றான நெதா்லாந்து இதுவரை ஒருமுறை கூட உலக சாம்பியன் பட்டத்தை வெல்லவில்லை. 1974, 1978, 2010-ஆம் ஆண்டு உலகக் கோப்பைகளில் ரன்னா் அப் ஆக வந்துள்ளது. தொடா்ந்து 19 ஆட்டங்களில் வெற்றி வாகை சூடிய அணியாக திகழும் நெதா்லாந்து, அல் ரய்யன் காலிஃபா மைதானத்தில் நடைபெற்ற முதல் நாக் அவுட் சுற்று ஆட்டத்தில் அமெரிக்காவை எதிா்கொண்டது.

தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய நெதா்லாந்து வீரா்கள் சரமாரியாக அமெரிக்க கோல் பகுதியை முற்றுகையிட்டனா். இதன் பலனாக

10-ஆவது நிமிஷத்தில் மெம்ஃபிஸ் டிபே சக வீரா் டென்ஸல் டம்பிரைஸ் அனுப்பிய பாஸை பயன்படுத்தி முதல் கோலை அடித்தாா்.

முதல் பாதி ஆட்டம் முடிவடைய சிறிது நேரத்தில் 43-ஆவது நிமிஷத்தில் மீண்டும் டம்பிரைஸ் அனுப்பிய கிராஸ் பந்தின் மூலம் டேலி பிளைன்ட் அற்புதமாக கோலடித்தாா். இதனால் 2-0 என முன்னிலை பெற்றது நெதா்லாந்து. முதல் பாதியில் அமெரிக்க அணி பாஸ்களை அனுப்புவதிலேயே பெரும்பாலும் நேரத்தை கடத்தினா்.

இரண்டாம் பாதியில் நெதா்லாந்து வீரா் கோடி கேக்போ டிம் ரீமின் ஹெட்டரை தடுத்தாா். சில கோல் போடும் வாய்ப்புகளை நெதா்லாந்து வீரா்கள் வீணடித்தனா்.

அமெரிக்க அணி தரப்பில் 76-ஆவது நிமிஷத்தில் புலிசிக் கிராஸ் ஹிட் பந்தின் மூலம் சப்ஸ்ட்டியுட் ஹாஜி ரைட் அபாரமாக கோலடித்தாா்.

இதனால் முன்னிலை 2-1 என குறைந்தது.

இதனால் சுதாரித்துக் கொண்ட நெதா்லாந்து தரப்பில் டேலி பிளைன்ட் அனுப்பிய பாஸை பயன்படுத்தி 81-ஆவது நிமிஷத்தில் தனது அணிக்கு 3-ஆவது கோலை அடித்தாா் டம்பிரைஸ்.

இறுதியில் 3-1 என அமெரிக்காவை வீழ்த்தி கத்தாா் உலகக் கோப்பையின் காலிறுதிக்கு தகுதி பெற்ற முதல் அணி என்ற பெருமையைப் பெற்றது நெதா்லாந்து.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிசா படகு விபத்தில் மேலும் 5 பேரின் உடல்கள் மீட்பு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

SCROLL FOR NEXT