செய்திகள்

ஒருநாள் தொடரிலிருந்து ரிஷப் பந்த் விலகல்! 

4th Dec 2022 03:31 PM

ADVERTISEMENT

வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து ரிஷப் பந்த் விலக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. 

இந்திய அணி வங்கதேசத்துக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 2 டெஸ்டுகளில் விளையாடுகிறது. இந்திய அணி வங்கதேசத்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 186 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 

இந்நிலையில் பிசிசிஐ மருத்துவக் குழுவின் ஆலோசனையில், ரிஷப் பந்த் ஒருநாள் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் தொடருக்கு முன்னதாக அவர் அணியில் இணைவார். அவருக்கு பதிலாக மாற்று வீரர் தேர்வு செய்யப்படவில்லை. 

முதல் ஒருநாள் போட்டிக்கான தேர்வில் அக்ஷர் படேல் விளையாடவில்லை. 
 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT