செய்திகள்

164 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி! 

4th Dec 2022 01:07 PM

ADVERTISEMENT

மேற்கிந்தியத் தீவுகள் அணி, ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து இரு டெஸ்டுகளில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் பெர்த்தில் நவம்பர் 30இல் தொடங்கியது. 

முதல் இன்னிங்ஸில் ஆஸி. 598 ரன்களுக்கு டிக்லேர் செய்தது. இதில் லபுஷேன், ஸ்மித் இருவரும் இரட்டை சதம் அடித்தனர். அடுத்து மே.இ. தீவுகள் அணி 283 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆஸி. இரண்டாம் இன்னிங்ஸில் 182 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. இதிலும் லபுஷேன் சதமடித்தார். பின்னர் ஆடிய மே.இ.தீவுகள் அணி 333 ரன்களுக்கு மொத்த விக்கெட்டையும் இழந்தது. 

பிரத்வெய்ட் மட்டும் அபாரமாக ஆடி 110 ரன்கள் எடுத்தாஎ. ரோஸ்டன் சேஸ் 55, அல்ஜாரி ஜோசப் 43 ரன்களும், டி சந்திரபால் 45 ரன்களும் எடுத்தனர். ஆஸி. சார்பில் நாதன் லயன் சார்பில் 6  விக்கெட்டுகளை வீழ்த்தினார்.  

1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது ஆஸ்திரேலிய அணி. லபுஷேன் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT