செய்திகள்

ஒருநாள் தொடர்: ஷமி விலகல், உம்ரான் மாலிக் சேர்ப்பு!

3rd Dec 2022 11:44 AM

ADVERTISEMENT

 

வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து முகமது ஷமி விலகியுள்ளார். இதையடுத்து இளம் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

வங்கதேசத்துக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 2 டெஸ்டுகளில் இந்திய அணி விளையாடுகிறது. ஒருநாள் தொடர் நாளை முதல் தொடங்குகிறது. இந்நிலையில் தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஒருநாள் தொடரிலிருந்து இந்திய அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஷமி விலகியுள்ளார். இந்தக் காயம் காரணமாக டெஸ்ட் தொடரிலும் அவரால் பங்கேற்க முடியாத சூழல் உருவாகும் எனத் தெரிகிறது.

இதையடுத்து ஷமிக்குப் பதிலாக இளம் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 23 வயது உம்ரான் மாலிக், இந்திய அணிக்காக இதுவரை 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT