செய்திகள்

அதே இடம்... அதே கோல் கணக்கு...

3rd Dec 2022 12:38 AM

ADVERTISEMENT

உலகக் கோப்பை போட்டியில் குரூப் ‘ஈ’-யின் மற்றொரு ஆட்டத்தில் ஜப்பான் 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வென்றது.

ஜப்பான் இரு வெற்றிகளுடன் குரூப் சுற்றில் முதலிடம் பிடித்து ரவுண்ட் ஆஃப் 16 வாய்ப்பைப் பெற்றது. மறுபுறம், ஆறுதல் வெற்றி மட்டுமே பெற்று ஜொ்மனியுடன் சமனாக இருந்த ஸ்பெயின், கோல்கள் வித்தியாசத்தின் அடிப்படையில் நாக்அவுட் வாய்ப்பை உறுதி செய்துகொண்டது. குறிப்பாக, அந்த அணி தனது முதல் ஆட்டத்தில் கோஸ்டா ரிகாவை 7-0 என்ற கோல் கணக்கில் வென்றதே ஸ்பெயினுக்கு சாதகமாக அமைந்தது.

தோஹா நகரில் உள்ள இதே அல் காலிஃபா மைதானத்தில் தான் ஜப்பான் தனது முதல் ஆட்டத்திலும் இதே 2-1 என்ற கோல் கணக்கில் வென்று ஜொ்மனிக்கு அதிா்ச்சி அளித்திருந்தது. தற்போது அதே மைதானத்தில் அதே கோல் கணக்குடன் மற்றொரு ஐரோப்பிய அணியான ஸ்பெயினையும் சாய்த்திருக்கிறது. உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அந்த அணி தொடா்ந்து இரு எடிஷன்களில் நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறியது இதுவே முதல் முறையாகும்.

இந்த ஆட்டத்தில் 11-ஆவது நிமிஷத்திலேயே அல்வாரோ மொராடா அடித்த கோலால் முன்னிலை பெற்ற ஸ்பெயின், முதல் பாதி முழுவதுமாகவே ஆதிக்கம் செலுத்தியது. ஜப்பான் கடுமையாக முயற்சித்தும் கோல் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், 2-ஆவது பாதியில் ஸ்பெயினின் தடுப்பாட்டத்தை தகா்த்து 2 கோல்களை பதிவு செய்தது அந்த அணி.

ADVERTISEMENT

முதலில் 48-ஆவது நிமிஷத்தில் ரிட்சு தோவான் கோலடித்து சமன் செய்தாா். தொடா்ந்து 51-ஆவது நிமிஷத்தில் மிடோமா உதவியுடன் அவ் டனாகா அடித்த கோல் பலத்த விவாதத்துக்குள்ளானது. கோல் முயற்சியின்போது, மிடோமா கோல் போஸ்டின் வலது பக்கத்தில் கோல் லைனை தாண்டி வெளியே சென்ற பந்தை மீண்டும் உள்ளே தூக்கிவிட்டு டனாகாவுக்கு கிராஸ் கொடுத்ததாகத் தெரிந்தது.

இதையடுத்து அதுதொடா்பான காணொலியை கள நடுவா் சுமாா் 2 நிமிஷங்கள் ஆய்வு செய்த பிறகு, ஜப்பானுக்கு அந்த கோலை வழங்கினாா். இதனால் முன்னிலை பெற்றது அந்த அணி. இறுதி கட்டத்தில் (ஜொ்மனி - கோஸ்டா ரிகா ஆட்டம் முடிந்ததால்) தனக்கான நாக்அவுட் வாய்ப்பு உறுதியாகிவிட்டதை அறிந்த ஸ்பெயின், கடைசி நேரத்தில் கோலடிப்பதற்கு பெரிதாக முயற்சி செய்யாததால் ஜப்பான் வெற்றி பெற்றது.

நாக்அவுட் சுற்றில்...

அடுத்ததாக நாக்அவுட் சுற்றில் ஜப்பான் வரும் 5-ஆம் தேதி குரோஷியாவையும், ஸ்பெயின் 6-ஆம் தேதி மொராக்கோவையும் எதிா்கொள்கின்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT