செய்திகள்

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: வங்கதேச கேப்டனாக லிடன் தாஸ் நியமனம்

2nd Dec 2022 09:36 PM

ADVERTISEMENT

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு வங்கதேச அணியின் கேப்டனாக லிடன் தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய அணி வங்கதேசத்துக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 2 டெஸ்டுகளில் விளையாடுகிறது. அதில் முதல் ஒருநாள் போட்டி டிசம்பர் 4 ஆம் தேதி நடக்கிறது. இந்த நிலையில் இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இருந்து வங்கதேச அணியின் கேப்டன் தமிம் இக்பால், விலகியுள்ளார். 

புதன்கிழமை பயிற்சி ஆட்டத்தின் போது தமீம் இக்பாலுக்கு இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக ஒருநாள் தொடரில் இருந்து அவர் விலகியுள்ளார். மேலும் தமிம் இக்பாலுக்கு பதிலாக அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஷோரிஃபுல் இஸ்லாம் சேர்க்கப்பட்டுள்ளார். 

இதையும் படிக்க- விஜய் ஹசாரே கோப்பை: செளராஷ்டிரம் சாம்பியன்

ADVERTISEMENT

இதனிடையே இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு வங்கதேச அணியின் கேப்டனாக லிடன் தாஸ் செயல்படுவார் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. ஒருநாள் தொடரிலிருந்து வங்கதேச அணியின் கேப்டன் விலகியிருப்பது அந்த அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. 

வங்கதேச அணி: லிடன் தாஸ்(கேப்டன்), அனாமுல் ஹக், ஷகிப் அல் ஹசன், முஷ்ஃபிகுர் ரஹிம், நஜ்முல் ஹுசைன் ஷான்டோ, மஹ்முதுல்லா, நுருல் ஹசன், அஃபிஃப் ஹுசைன், யாசிர் அலி, மெஹிதி ஹசன் மிராஸ், டஸ்கின் அஹமது, ஹசன் மஹ்முது, முஸ்தாபிசுர் ரஹ்மான், எபடாட் ஹுசைன், நசும் அஹமது. ஷோரிஃபுல் இஸ்லாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT