செய்திகள்

ராவல்பிண்டியில் ஓய்ந்த புயல்: புதிய சாதனைகளுடன் ஆல் அவுட் ஆன இங்கிலாந்து!

DIN

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் 657 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது இங்கிலாந்து அணி.

பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்டுகளில் விளையாடுகிறது இங்கிலாந்து அணி. இதற்காக ராவல்பிண்டியில் இங்கிலாந்து வீரர்கள் பயிற்சி மேற்கொண்டிருந்தபோது திடீரென 8 வீரர்கள் உள்பட இங்கிலாந்து அணியைச் சேர்ந்த 14 பேர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டார்கள். ஒரு வீரரைத் தவிர அனைவரும் உடல்நலம் தேறிவிட்டதால் திட்டமிட்டபடி டெஸ்ட் தொடர் தொடங்கியது. இங்கிலாந்து அணியில் போக்ஸுக்குப் பதிலாக வில் ஜாக்ஸ் தேர்வானார். போப் விக்கெட் கீப்பராகச் செயல்படுகிறார். வில் ஜாக்ஸ், லிவிங்ஸ்டன் ஆகிய இருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அறிமுகமாகியுள்ளார்கள். பாகிஸ்தான் அணியில் ஹாரிஸ் ராஃப் உள்பட நான்கு பேர் அறிமுகமாகியுள்ளார்கள். டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 75 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 506 ரன்கள் குவித்தது. ஸாக் கிராவ்லி 122, பென் டக்கட் 107, ஆலி போப் 108, புரூக் 101* ரன்கள் எடுத்து அசத்தினார்கள். டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் நாளில் இதுவரை எந்த அணியும் 500 ரன்களை எடுத்ததில்லை. இதனால் 112 வருட சாதனையை முறியடித்தது இங்கிலாந்து. அதேபோல முதல் நாளில் எந்த அணி வீரர்களும் நான்கு சதங்கள் அடித்ததில்லை. 

2-வது நாளில் இங்கிலாந்து அணி 101 ஓவர்களில் 657 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ரன்ரேட் - 6.50. ஹாரி புரூக் 153, ஸ்டோக்ஸ் 41, வில் ஜாக்ஸ் 30, ஆலி ராபின்சன் 37 ரன்கள் எடுத்தார்கள். ஸாகித் முகமது 4 விக்கெட்டுகளையும் நசீம் ஷா 3 விக்கெட்டுகளையும் எடுத்தார்கள். 

இன்றும் இங்கிலாந்தின் சாதனைகள் தொடர்ந்துள்ளன. டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் இன்னிங்ஸில் ஒரு ஓவருக்கு 6 ரன்களுக்கு மேல் எடுத்த முதல் அணி என்கிற பெருமையை அடைந்தது இங்கிலாந்து. மேலும் ஒரு இன்னிங்ஸில் ஒரு ஓவருக்கு 6 ரன்களுக்கு மேல் எடுத்ததில் அதிக ஓவர்களை விளையாடிய அணியும் இங்கிலாந்து தான். இதற்கு முன்பு 2005-ல் ஜிம்பாப்வேக்கு எதிராக 50 ஓவர்கள் வரை இப்படி விளையாடியது தென்னாப்பிரிக்கா. அதைவிடவும் இரு மடங்கு ஓவர்கள் விளையாடி சாதனை படைத்துள்ளது இங்கிலாந்து. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

SCROLL FOR NEXT