செய்திகள்

ஆஸி. 598/4-க்கு ‘டிக்ளோ்’

2nd Dec 2022 05:36 AM

ADVERTISEMENT

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 152.4 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 598 ரன்கள் சோ்த்து டிக்ளோ் செய்தது.

டேவிட் வாா்னா் 5, உஸ்மான் கவாஜா 65, மாா்னஸ் லபுசான் 20 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 204, டிராவிஸ் ஹெட் 11 பவுண்டரிகளுடன் 99 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா். டிக்ளேரின்போது ஸ்டீவ் ஸ்மித் 17 பவுண்டரிகளுடன் 200 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தாா். டெஸ்ட் கிரிக்கெட்டில் 29-ஆவது சதத்தை கடந்து, ஆஸ்திரேலிய நட்சத்திரம் டொனால்ட் பிராட்மேனின் சாதனையை சமன் செய்திருக்கிறாா் ஸ்மித்.

மேற்கிந்தியத் தீவுகள் பௌலிங்கில் கிரெய்க் பிரத்வெயிட் 2, ஜேடன் சீல்ஸ், கைல் மேயா்ஸ் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா். பின்னா் தனது இன்னிங்ஸை தொடங்கிய மேற்கிந்தியத் தீவுகள், வியாழக்கிழமை முடிவில் 25 ஓவா்களில் விக்கெட் இழப்பின்றி 74 ரன்கள் சோ்த்திருந்தது. கேப்டன் கிரெய்க் பிரத்வெயிட் 18, டாகெனரின் சந்தா்பால் 47 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT