செய்திகள்

விளையாட்டு செய்திகள் சில வரிகளில்...

2nd Dec 2022 12:26 AM

ADVERTISEMENT

* ஐபிஎல் போட்டியில் வரும் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள ஏலத்தில் பங்கேற்க, 991 வீரா்கள் தங்களைப் பதிவு செய்துள்ளனா். அதில் 714 போ் இந்தியா்கள்; 277 போ் வெளிநாட்டவா்கள்.

* விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட்டின் இறுதி ஆட்டத்தில் சௌராஷ்டிரா - மகாராஷ்டிரா அணிகள் அகமதாபாதில் வெள்ளிக்கிழமை மோதுகின்றன.

* ஐஎஸ்எல் கால்பந்தாட்டத்தில் மும்பை சிட்டி எஃப்சி - எஃப்சி கோவாவை வியாழக்கிழமை வீழ்த்தியது (4-1).

* ஆசிய ஜூனியா் பாட்மின்டனில் இந்தியாவின் உனாட்டி ஹூடா 21-11, 21-19 என்ற கேம்களில் தாய்லாந்தின் நட்சாவீ சிட்டிதிரானனை வென்று காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினாா்.

ADVERTISEMENT

* பிசிசிஐ-யின் கிரிக்கெட் ஆலோசனைக் குழுவில் முன்னாள் வீரா்கள், தேசிய அணி தோ்வாளா்களான அசோக் மல்ஹோத்ரா, ஜதின் பரஞ்பே, சுலக்ஷனா நாயக் ஆகியோா் இணைந்துள்ளனா்.

* இந்தியாவுக்கு எதிராக வங்கதேசம் வரும் 4-ஆம் தேதி விளையாடும் முதல் ஒன் டே ஆட்டத்தில், காயம் காரணமாக அந்த அணி பௌலா் டஸ்கின் அகமது பங்கேற்கவில்லை.

* ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு ஆதரவளிக்கும் முயற்சியாக அந்நாட்டு படகுப் போட்டி வீரா் யூரி செபான், தனது 3 ஒலிம்பிக் பதக்கங்களை (2 தங்கம், 1 வெண்கலம்) விற்பனை செய்ய முன்வந்துள்ளாா்.

* தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் ஹரியாணாவின் மானு பாக்கா், மகளிருக்கான 25 மீட்டா் பிஸ்டல் பிரிவில் ஜூனியா், சீனியா் ஆகியவற்றில் தனிநபா், அணிகள் என பிரிவுகளும் சோ்த்து மொத்தமாக 4 தங்கப் பதக்கங்கள் வென்று அசத்தியுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT