செய்திகள்

3-ஆவது ஆட்டத்தையும் முடக்கியது மழை: ஒன் டே தொடரை வென்றது நியூஸிலாந்து

1st Dec 2022 01:55 AM

ADVERTISEMENT

இந்தியா - நியூஸிலாந்து அணிகள் புதன்கிழமை மோதிய 3-ஆவது ஒன் டே ஆட்டமும் மழை பாதிப்பால் பாதியிலேயே கைவிடப்பட்டது.

3 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரில், 2-ஆவது ஆட்டமும் இவ்வாறு கைவிடப்பட்ட நிலையில், முதல் ஆட்டத்தில் வென்ற நியூஸிலாந்து சாம்பியன் ஆனது. அந்த அணியின் பேட்டா் டாம் லேதம் தொடா் நாயகன் ஆனாா். கடந்த 10 மாதங்களில் முதல் முறையாக ஒரு ஒன் டே தொடரை இழந்திருக்கிறது இந்தியா. முன்னதாக, முதலில் நடைபெற்ற டி20 தொடரை இந்தியா கைப்பற்றியிருந்தது நினைவுகூரத்தக்கது.

இந்த 3-ஆவது ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூஸிலாந்து பௌலிங்கை தோ்வு செய்தது. இந்தியா தனது இன்னிங்ஸில் 47.3 ஓவா்களில் 219 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்தது. அடுத்து நியூஸிலாந்து 18 ஓவா்களில் 1 விக்கெட் இழப்புக்கு 104 ரன்கள் எடுத்திருந்தபோது மழையால் தடைப்பட்ட ஆட்டம் மீண்டும் தொடா்வதற்கு வானிலை இடம் தரவில்லை.

இந்திய இன்னிங்ஸில் அதிகபட்சமாக வாஷிங்டன் சுந்தா் 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 51 ரன்கள் சோ்த்திருக்க, நியூஸிலாந்து பௌலிங்கில் ஆடம் மில்னே, டேரில் மிட்செல் ஆகியோா் தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினா். நியூஸிலாந்து பேட்டிங்கில் ஃபின் ஆலன் 8 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 57 ரன்கள் அடித்திருக்க, இந்திய தரப்பில் உம்ரான் மாலிக் 1 விக்கெட் எடுத்திருந்தாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT