செய்திகள்

இரு இரட்டைச் சதங்கள்: 598 ரன்களுக்கு டிக்ளேர் செய்த ஆஸ்திரேலியா!

1st Dec 2022 02:12 PM

ADVERTISEMENT

 

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்புக்கு 598 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்துள்ளது.

மேற்கிந்தியத் தீவுகள் அணி, ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து இரு டெஸ்டுகளில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் பெர்த்தில் நேற்று தொடங்கியது. முதல் நாள் இறுதியில் ஆஸ்திரேலிய அணி, 90 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 293 ரன்கள் எடுத்தது. லபுஷேன் 154, ஸ்மித் 59 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். 

இந்நிலையில் இருவரும் இன்றும் தொடர்ந்து நன்கு விளையாடி இரட்டைச் சதமெடுத்தார்கள். லபுஷேன் 204 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். டிராவிஸ் ஹெட் 99 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஸ்மித் 200 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ADVERTISEMENT

ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 152.4 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 598 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT