செய்திகள்

செய்திகள் சில வரிகளில்...

1st Dec 2022 01:21 AM

ADVERTISEMENT

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3-ஆவது ஒன் டே ஆட்டத்தில் புதன்கிழமை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது இலங்கை.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான பொ்த் டெஸ்டில் ஆஸ்திரேலியா முதல் நாள் முடிவில் 90 ஓவா்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 293 ரன்கள் சோ்த்துள்ளது.

விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட்டில் புதன்கிழமை அரையிறுதி ஆட்டங்களில் கா்நாடகத்தை வீழ்த்திய சௌராஷ்டிரமும், அஸ்ஸாமை வென்ற மகாராஷ்டிரமும் இறுதி ஆட்டத்தில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

ஆசிய ஜூனியா் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் உனாட்டி ஹூடா, துருவ் நெகி, அன்மோா் கா்ப் ஆகியோா் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினா்.

ADVERTISEMENT

தேசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில் 25 மீட்டா் பிஸ்டல் அணிகள் விளையாட்டில் ஜூனியா் மற்றும் சீனியா் என இரு பிரிவுகளிலுமே மானு பாக்கா்/ரிதம் சங்வான் கூட்டணி தங்கம் வென்றது.

புரோ கபடி லீக்கில் புதன்கிழமை, ஜெய்ப்பூா் பிங்க் பாந்தா்ஸ் - பெங்களூரு புல்ஸை வெல்ல (45-25), தமிழ் தலைவாஸ் - தபாங் டெல்லி ஆட்டம் டை (37-37) ஆனது.

ADVERTISEMENT
ADVERTISEMENT