செய்திகள்

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வேகப்பந்து வீச்சாளர்!

28th Aug 2022 04:23 PM

ADVERTISEMENT

 

இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன், சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வேகப்பந்து வீச்சாளர் என்கிற சாதனையை படைத்தார்.

இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மான்செஸ்டரில் நடைபெற்ற 2-வது டெஸ்ட்டில் இங்கிலாந்து அபார வெற்றி. 

டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்த டெஸ்டில் விளையாடும் 40 வயது இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் 950 விக்கெட்டுகளை எடுத்து சாதனைப் படைத்துள்ளார். மெக்ராத்  எடுத்த 949 விக்கெட்டுகளை முறியடித்து சாதனை படைத்தார் ஆண்டர்சன். 

ADVERTISEMENT

இங்கிலாந்து 415 ரன்கள் எடுத்தது முதல் இன்னிங்ஸில். 3-ம் நாள் முடிவில் தென்னாப்பிரிக்க அணி 179 ரனகளுக்கு மொத்த விக்கெட்டும் இழந்தது. இங்கிலாந்து அணி 89 ரன்கள் மற்றும் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தற்போது தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் (டெஸ்ட், ஒருநாள், டி20)

  • ஆண்டர்சன் - 951 விக்கெட்டுகள்
  • மெக்ராத்      -  949 விக்கெட்டுகள்
  • வாசிம் அக்ரம் - 916 விக்கெட்டுகள்
ADVERTISEMENT
ADVERTISEMENT