செய்திகள்

ஆசியக் கோப்பை: பந்து வீச்சை தேர்வு செய்த இந்தியா, அணியில் இடம் பிடித்த தினேஷ் கார்த்திக்

28th Aug 2022 07:09 PM

ADVERTISEMENT

ஆசியக் கோப்பையில் இன்றையப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி  பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

ஆசியக் கோப்பையில் இன்று (ஆகஸ்ட் 28) நடைபெறும் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.  இந்தப் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபை சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது.

இதையும் படிக்க: 9 வினாடிகளில் தகர்ந்தது இரட்டை கோபுரம்:  ரூ.20 கோடியில் தகர்ப்பதற்காக ரூ.100 கோடி காப்பீடு!

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். 

ADVERTISEMENT

இந்திய அணியில் இன்றையப் போட்டியில் ரிஷப் பந்த் இடம் பெறவில்லை. ஆவேஷ் கான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதே போல தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் அணியில் இடம் பிடித்துள்ளார். 

இந்தியா:  ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், ஆவேஷ் கான், யுஸ்வேந்திர சஹால், அர்ஷ்தீப் சிங்.

பாகிஸ்தான்:  பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான், ஃபகர் சமான், இஃப்திகார் அகமது, குஷ்தில் ஷா, ஷதாப் கான், முகமது நவாஸ், ஆசிஃப் அலி, நசீம் ஷா, ஹரிஷ் ரௌஃப், ஷாநவாஸ் தானி.

ADVERTISEMENT
ADVERTISEMENT