செய்திகள்

டி20 போட்டியில் புதிய சாதனை படைக்கும் விராட் கோலி!

27th Aug 2022 12:11 PM

ADVERTISEMENT

 

ஆசிய கோப்பை நாளைய போட்டியில் விராட் கோலி விளையாடினால் இந்தியாவிலேயே அதிக டி20 போட்டிகளை விளையாடிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்த உள்ளார். 

இந்தியாவின் சார்பாக முதல் 100 டி20 போட்டிகளில் விளையாடிய இந்திய வீரர என்ற சாதனையை முன்னாள் கேப்டன் விராட் கோலி நிகழ்த்தவிருக்கிறார். ஆசிய கோப்பை இன்று தொடங்கவிருக்கிறது. இந்தியா நாளை பாகிஸ்தானுடன் முதல் போட்டியில் விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது. 

இதுவரை விராட் கோலி 99 டி20 போட்டிகளில் 3308 ரன்களை எடுத்துள்ளார். சராசரி 50.12 என்பது குறிப்பிடத்தக்கது.  டி20 போட்டிகளில் அவரது அதிகபட்ச ஸ்கோர் 94 ஆகும். 

ADVERTISEMENT

2017- 2021 முதல் 50 போட்டிகளில் கேப்டனாக இருக்கும்போது 30 போட்டிகளில் வெற்றி, 16 போட்டிகளில் தோல்வி, 2 போட்டிகளில் டிரா மற்ற இரண்டு போட்டிகளில் முடிவு எடுக்காமல் ஆட்டம் கைவிடப்பட்டது.  

இந்தாண்டு மிகவௌம் கடினமான நாட்களாக இருந்து வருகிறது. இந்தாண்டு 52தான் அவரது அதிகபட்ச ஸ்கோர். சராசரி 20.25 ஆகும். 

விராட் கோலி சதமடித்து 1000 நாட்களை கடந்து விட்டது. அவரது 71வது சதத்திற்கு அவரைப்போலவே அவரது ரசிகர்களும் காத்திருக்கின்றனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT