செய்திகள்

நடுவரின் தீர்ப்பால் சர்ச்சை, அதிர்ச்சியில் இலங்கை வீரர்கள்

27th Aug 2022 08:27 PM

ADVERTISEMENT

ஆசியக் கோப்பையின் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்து வரும் இலங்கை அணி வீரர்கள் நடுவரின் சர்ச்சைக்குரிய தீர்ப்பால் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஆசியக் கோப்பையின் முதல் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்ததையடுத்து இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தொடங்கியது. அந்த அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. முதல் ஓவரை வீசிய ஃபரூக்கி இலங்கை அணியின் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 

இதையும் படிக்க: சிபிஐ சோதனையில் என்ன கிடைத்ததென்று சொல்லுங்கள்? ஆம் ஆத்மி போராட்டம்

ஃபரூக்கியின் முதல் ஓவரில் குசால் மெண்டிஸ் மற்றும் சாரித் அசலங்கா விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினர். இதனையடுத்து, அடுத்த ஓவரிலேயே இலங்கை அணி அடுத்த விக்கெட்டினை இழந்தது. பதும் நிசங்கா வீக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இருப்பினும் அவர் நடுவரின் முடிவை ரிவியூ செய்தார். ரிவியூ செய்து பார்க்கையில் பந்து பேட்டில் படாமல் சென்றதுபோல் தெரிந்தது. அதனால் இலங்கை அணி நிம்மதியடைந்தது. ஆனால், மூன்றாம் நடுவர் அவுட் என அறிவிக்க இலங்கை அணியினர் மட்டுமின்றி மைதானத்தில் இருந்த இலங்கை அணியின் ரசிகர்களும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

ADVERTISEMENT

மூன்றாம் நடுவரின் இந்த தீர்ப்பு இலங்கை அணிக்கு பெரிய ஏமாற்றத்தை கொடுத்துள்ளது என்பதில் சந்தேகமில்லை. இருப்பினும், வேறு வழியின்றி நடுவரின் தீர்ப்பை ஏற்று பதும் நிசங்கா ஏமாற்றத்துடன் பெவிலியன் திரும்பினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT