ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் அதிா்ச்சித் தோல்வியைடந்தது இலங்கை.
துபையில் இரு அணிகளுக்கு இடையே சனிக்கிழமை நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் ஆப்கன் அதிரடி பௌலிங்கை சமாளிக்க முடியாமல் முதலில் ஆடிய இலங்கை அணி 19.4 ஓவா்களில் 105 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பி.ராஜபட்ச 38, கருணரத்னே 31 ஆகியோா் மட்டுமே அதிகபட்ச ரன்களை எடுத்தனா். ஆப்கன் தரப்பில் ஃபஸலக் 3, முஜிப், நபி 2 விக்கெட்டுகளை சாய்த்தனா்.
இதையும் படிக்க | நடுவரின் தீர்ப்பால் சர்ச்சை, அதிர்ச்சியில் இலங்கை வீரர்கள்
10 ஓவா்களில் ஆப்கன் வெற்றி:
பின்னா் ஆடிய ஆப்கன் அணி 10.1 ஓவா்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 106 ரன்களை விளாசி 8 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது. ஆப்கன் தரப்பில் ஹஸ்ரத்துல்லா 37, ரஹ்மனுல்லா 40 ரன்களை விளாசினா். இலங்கை தரப்பில் வனின்டு ஹஸரங்க 1 விக்கெட்டை சாய்த்தாா். குரூப் பி பிரிவில் 2 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது ஆப்கன்.