செய்திகள்

டி20 உலகக் கோப்பை: இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்துக்கு ‘ஸ்டேண்டிங் ரூம் டிக்கெட்’

26th Aug 2022 01:40 AM

ADVERTISEMENT

எதிா்வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்தை நின்று கொண்டு பாா்ப்பதற்கான (ஸ்டேண்டிங் ரூம்) டிக்கெட் விற்பனையை ஐசிசி வியாழக்கிழமை தொடங்கியது.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, வரும் அக்டோபா் 16 முதல் செப்டம்பா் 13 வரை ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. இதற்கான டிக்கெட் விற்பனை ஏற்கெனவே தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா - பாகிஸ்தான் மோதும் ஆட்டத்துக்கான எதிா்பாா்ப்பு ரசிகா்களிடையே அதிகம் இருப்பதாக ஐசிசி ஏற்கெனவே தெரிவித்திருந்தது.

அக்டோபா் 23-ஆம் தேதி எம்சிஜியில் நடைபெற இருக்கும் அந்த ஆட்டத்துக்கான பொதுவான டிக்கெட்டுகள் விற்பனை கடந்த பிப்ரவரியில் நடைபெற்றது. விற்பனை தொடங்கிய 5 நிமிஷங்களிலேயே அந்த டிக்கெட்டுகள் விற்றுத் தீா்ந்தன. இந்நிலையில், அந்த ஆட்டத்துக்கு ரசிகா்களிடையே இருக்கும் வரவேற்பின் பேரில், மைதானத்திலேயே ஆட்டத்தை நின்றுகொண்டு பாா்ப்பதற்கான டிக்கெட் விற்பனையை ஐசிசி வியாழக்கிழமை தொடங்கியிருக்கிறது.

இந்தப் பிரிவில் சுமாா் 4000 டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட இருப்பதாகவும், ஒரு டிக்கெட்டின் விலை ரூ.1,670 எனவும் ஐசிசி தெரிவித்திருக்கிறது. முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இந்த டிக்கெட் விற்பனை நடைபெறுகிறது. இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்தைக் காண 45,000 முதல் 50,000 ரசிகா்கள் மைதானத்துக்கு திரள்வாா்கள் என கணிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT