செய்திகள்

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்: இந்தியாவின் பிரணாய் தோல்வி

26th Aug 2022 04:20 PM

ADVERTISEMENT

 

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் ஒற்றையர் காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பிரணாய் தோல்வியடைந்துள்ளார்.

இன்று நடைபெற்ற காலிறுதிச்சுற்றில் சீனாவின் ஜுன் பெங்கை எதிர்கொண்டார் பிரணாய்.  21-19, 6-21, 18-21 என சீன வீரரிடம் கடுமையாகப் போராடி தோல்வியடைந்தார் பிரணாய். காயம் காரணமாக இன்று தன்னுடைய முழுத் திறமையை பிரணாயால் வெளிப்படுத்த முடியாமல் போனது. 

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் கடந்த இருமுறையும் பிரணாயால் பதக்கம் வெல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இருமுறையும் காலிறுதியில் தோல்வியடைந்துள்ளார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT