செய்திகள்

எனக்கு வயது 35 தான், 75 அல்ல: ஷெல்டன் ஜாக்ஸன் கோபம்

25th Aug 2022 12:23 PM

ADVERTISEMENT

 

இந்திய ஏ அணிக்குத் தன்னைத் தேர்வு செய்யாதது குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார் ஷெல்டன் ஜாக்ஸன்.

நியூசிலாந்து அணி ஏ அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 நான்கு நாள் ஆட்டங்களிலும் 3 லிஸ்ட் ஏ ஆட்டங்களிலும் விளையாடவுள்ளது. நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான முதல்தர கிரிக்கெட்டில் விளையாடவுள்ள இந்திய ஏ அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் பல நட்சத்திர வீரர்கள் இடம்பெற்றுள்ளார்கள். எனினும் செளராஷ்டிர அணி வீரர் ஷெல்டன் ஜான்ஸன் இந்த அணியில் இடம்பெறவில்லை. இதையடுத்து தன்னுடைய கோபத்தை ட்விட்டரில் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

மூன்று பருவங்களாக நன்கு விளையாடியதால் வயதை வைத்து அல்ல, திறமையை வைத்து வாய்ப்பு கிடைக்கும் என நம்பவும் கனவு காணவும் எனக்கு உரிமை உள்ளது. திறமையான வீரராக இருந்தாலும் வயதானவன் என்கிற காரணம் கேட்டு சோர்ந்து போகிறேன். என் வயது 35 தான் 75 அல்ல என்று கூறியுள்ளார். 

ADVERTISEMENT

ஐபிஎல் 2022 போட்டியில் கொல்கத்தா நைட்ரைட்ஸ் அணிக்காக விளையாடி விக்கெட் கீப்பிங் திறமைகளுக்காக அதிகப் பாராட்டுகளைப் பெற்றார் ஷெல்டன் ஜாக்ஸன். 

ஷெல்டன் ஜாக்ஸன்: ரஞ்சிக் கோப்பைப் போட்டிகள்

ரஞ்சி கோப்பை 2021-22: 3 ஆட்டங்கள், 313 ரன்கள், சராசரி - 78.64
ரஞ்சி கோப்பை 2019-20: 10 ஆட்டங்கள், 809 ரன்கள், சராசரி - 50.56    
ரஞ்சி கோப்பை 2018-19: 11 ஆட்டங்கள், 854 ரன்கள், சராசரி - 47.44    

இந்தியா ஏ - நியூசிலாந்து ஏ அணிகளின் ஆட்டங்கள்

முதல் 4 நாள் ஆட்டம்: செப்டம்பர் 1 - 4  (பெங்களூர்)
2-வது 4 நாள் ஆட்டம்: செப்டம்பர் 8 - 11 (பெங்களூர்)
3-வது 4 நாள் ஆட்டம்: செப்டம்பர் 15 - 18 (பெங்களூர்)

முதல் லிஸ்ட் ஏ ஆட்டம்: செப்டம்பர் 22 (சென்னை)
2-வது லிஸ்ட் ஏ ஆட்டம்: செப்டம்பர் 25 (சென்னை)
3-வது லிஸ்ட் ஏ ஆட்டம்: செப்டம்பர் 27 (சென்னை)

 

ADVERTISEMENT
ADVERTISEMENT