செய்திகள்

இந்தியாவிடம் தொடர்ச்சியாக ஆட்டமிழக்கும் ஜிம்பாப்வே அணி

22nd Aug 2022 12:12 PM

ADVERTISEMENT

 

இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் ஆட்டத்தில் 38.1 ஓவர்களில் ஜிம்பாப்வே அணி 161 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்பிறகு பேட்டிங் செய்த இந்திய அணி, 25.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணி ஜிம்பாப்வே அணியைத் தொடர்ச்சியாக 7 முறை ஆட்டமிழக்கச் செய்துள்ளது. 2015 முதல் 2-வது ஒருநாள் ஆட்டம் வரை விளையாடிய 7 ஆட்டங்களிலும் ஜிம்பாப்வே அணியின் அனைத்து விக்கெட்டுகளையும் இந்தியா வீழ்த்தியுள்ளது. இதற்கடுத்ததாக இங்கிலாந்தை  இருமுறை தொடர்ச்சியாக 5 ஆட்டங்களில்ஆட்டமிழக்கச் செய்துள்ளது இந்தியா. 

ஒருநாள் கிரிக்கெட்: எதிரணியின் அனைத்து விக்கெட்டுகளையும் தொடர்ச்சியாக எடுத்த இந்தியா

ADVERTISEMENT

ஜிம்பாப்வே 2015-22: 7 முறை
இங்கிலாந்து 1997-02: 5 முறை
இங்கிலாந்து 2004-06: 5 முறை

ADVERTISEMENT
ADVERTISEMENT