செய்திகள்

இறுதிப் போட்டிக்கு முன்பு பிரக்ஞானந்தாவின் அக்கா கூறிய அறிவுரை என்ன தெரியுமா?

22nd Aug 2022 03:42 PM

ADVERTISEMENT

 

உலக சாம்பியன் கார்ல்சனுடனான இறுதிப் போட்டிக்கு முன்பு என்னுடைய  அக்கா வைஷாலி தன்னிடம் கூறிய அறிவுரை என்ன என்பதை பிரக்ஞானந்தா கூறியுள்ளார். 

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு அடுத்ததாக அமெரிக்காவின் மியாமியில் நடைபெற்ற (ரேபிட் முறையிலான) எஃப்டிஎக்ஸ் கிரிப்டோ கோப்பைப் போட்டியில் விளையானார் தமிழகத்தைச் சேர்ந்த 17 வயது செஸ் வீரர் பிரக்ஞானந்தா.

இறுதிப் போட்டியில் கார்ல்சனுடன் மோதினார் பிரக்ஞானந்தா. முதல் இரு ஆட்டங்களும் டிராவில் முடிவடைந்தன. 3-வது ஆட்டத்தில் பிரக்ஞானந்தாவை கார்ல்சன் வென்றபோது போட்டியின் முடிவு உறுதியானது. அடுத்த ஆட்டத்தில் பிரக்ஞானந்தா வென்றதால் இருவரும் 2-2 என சமனில் இருந்தார்கள். டை பிரேக்கரில் இரு ஆட்டங்களிலும் பிரக்ஞானந்தா வென்றார். இறுதிச்சுற்றில் கார்ல்சனை பிரக்ஞானந்தா வீழ்த்தினாலும் புள்ளிகளின் அடிப்படையில் எஃப்டிஎக்ஸ் கிரிப்டோ கோப்பையை வென்றார் கார்ல்சன். பிரக்ஞானந்தாவுக்கு 2-ம் இடம் கிடைத்தது. 

ADVERTISEMENT

அவரது அக்கா வைஷாலியும் கிராண்ட்மாஸ்டர் என்பது குறிப்பிடத்தக்கது. 

போட்டி முடிந்த பிறகு செஸ்பேஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பிரக்ஞானந்தா கூறியதாவது: 

போட்டிக்கு முன்பு எனது அக்காவிடம் இருந்து ஒரு குறுஞ்செய்தி மட்டும் வந்தது. அதில், “கவலைப்படாதே. கார்ல்சனை தோற்கடி” என்று மட்டும் இருந்தது. போட்டியில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி. ஆனால் இதில் பெரிதாக பெரிதாக கொண்டாட ஏதுமில்லை. அடுத்த 3 நாட்களுக்கு எந்த போட்டியிலும் விளையாடப்போவதில்லை. இதில் கிடைத்த பணத்தை விட கார்ல்சனை வென்றது பெரிதாக கருதுகிறேன். நான் எப்போதும் ஜாலியாக விளையாடவே நினைக்கிறேன். தோற்றாலும் அப்படித்தான். நான் ஜெயிப்பேனென நினைக்கவில்லை. ஆனால் விளையாடும்போது கவனமாக ஆடுவேன்.

ADVERTISEMENT
ADVERTISEMENT