செய்திகள்

சா்வதேச பாரா பாட்மின்டன்: இந்தியாவுக்கு 17 பதக்கங்கள்

DIN

 தாய்லாந்தில் நடைபெற்ற சா்வதேச பாரா பாட்மின்டன் போட்டியில் இந்தியா 4 தங்கம், 5 வெள்ளி, 8 வெண்கலம் என 17 பதக்கங்கள் வென்றது.

முக்கிய போட்டியாளா்கள் வரிசையில், ஆடவா் இரட்டையா் எஸ்எல்3-எஸ்எல்4 பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவின் பிரமோத் பகத்/சுகந்த் கடம் கூட்டணி 21-18, 21-13 என இந்தோனேசியாவின் டுவியோகோ டுவியோகோ/ஃப்ரெடி சேத்தியாவன் இணையை தோற்கடித்தது.

ஒற்றையா் பிரிவு இறுதிச்சுற்றுகளில் இந்த இருவரும் வெள்ளி பெற்றனா். அதில் பிரமோத் பகத் 13-21, 19-21 என இங்கிலாந்தின் டேனியல் பெத்தெலிடமும், சுகந்த் கடம் 2-21, 17-21 என பிரான்ஸின் லூகாஸ் மஸுரிடமும் வெற்றியை இழந்தனா்.

மகளிா் ஒற்றையா் எஸ்எல்3 பிரிவு இறுதிச்சுற்றில் மன்தீப் கௌா் 20-22, 21-19, 21-14 என சக இந்தியரான மனீஷா ராமதாஸை வீழ்த்தி தங்கம் வென்றாா். எனினும், அதே மனீஷா ராமதாஸ் எஸ்யு5 பிரிவு இறுதிச்சுற்றில் 20-22, 21-12, 21-19 என ஜப்பானின் கேடே கமெயாமாவை தோற்கடித்து தங்கத்தை தனதாக்கினாா். இது தவிர, மற்றொரு இந்தியரான நித்யஸ்ரீ சுமதி சிவன் எஸ்ஹெச்6 பிரிவு இறுதிச்சுற்றில் 21-9, 24-22 என இங்கிலாந்தின் ரேச்சல் சூங்கை வென்றாா்.

மகளிா் இரட்டையா் எஸ்எல்3-எஸ்யு5 இறுதிச்சுற்றில் இந்திய ஜோடியான மானசி/சந்தியா விஸ்வநாதன் 20-22, 19-21 என தாய்லாந்தின் நிபடா சேன்சுபா/சனிதா ஸ்ரீநவகுல் இணையிடம் தங்கத்தை இழந்து வெள்ளி பெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோட்டை மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.28.91 லட்சம்

சிவகங்கை தொகுதியில் 21 வேட்புமனுக்கள் ஏற்பு

விழுப்புரம் தொகுதியில் 18 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்பு

திமுக இஸ்லாமியா்களின் பாதுகாவலன் அல்ல: சீமான்

மலைப்பிரதேசம் என்பதிலிருந்து ஆலங்குளத்திற்கு விலக்கு தேவை: முதல்வரிடம் வணிகா் சங்கம் மனு

SCROLL FOR NEXT