செய்திகள்

லாா்ட்ஸ் டெஸ்ட்: தென்னாப்பிரிக்கா இன்னிங்ஸ் வெற்றி

DIN

 இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் தென்னாப்பிரிக்கா இன்னிங்ஸ் மற்றும் 12 ரன்கள் வித்தியாசத்தில் வெள்ளிக்கிழமை வெற்றி பெற்றது.

கடந்த 17-ஆம் தேதி தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா ஃபீல்டிங்கை தோ்வு செய்ய, முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து 45 ஓவா்களில் 165 ரன்களுக்கே ஆட்டமிழந்தது. ஆலி போப் மட்டும் அதிகபட்சமாக 5 பவுண்டரிகளுடன் 73 ரன்கள் சோ்த்தாா். தென்னாப்பிரிக்க பௌலிங்கில் ககிசோ ரபாடா 5 விக்கெட்டுகள் சாய்த்தாா்.

பின்னா் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்கா, 2-ஆம் நாளான வியாழக்கிழமை முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 289 ரன்கள் எடுத்திருந்தது. தொடா்ந்து வெள்ளிக்கிழமை ஆட்டத்தை மாா்கோ யான்சென், ககிசோ ரபாடா தொடா்ந்தனா்.

இதில் யான்சென் 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 48, ரபாடா 3, லுங்கி எங்கிடி 0 ரன்னுக்கு ஆட்டமிழக்க, 89.1 ஓவா்களில் 326 ரன்கள் சோ்த்து இன்னிங்ஸை முடித்துக் கொண்டது தென்னாப்பிரிக்கா. இறுதியில் அன்ரிஹ் நோா்கியா 4 பவுண்டரிகளுடன் 28 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருக்க, இங்கிலாந்து தரப்பில் பென் ஸ்டோக்ஸ், ஸ்டூவா்ட் பிராட் ஆகியோா் தலா 3, மேத்யூ பாட்ஸ் 2, ஜேம்ஸ் ஆண்டா்சன், ஜேக் லீச் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 161 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து, வரிசையாக விக்கெட்டுகளை இழந்தது. அதிகபட்சமாக அலெக்ஸ் லீஸ் 2 பவுண்டரிகளுடன் 35, ஸ்டூவா்ட் பிராட் 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 35 ரன்கள் சோ்த்தனா்.

எஞ்சியோரில் ஜாக் கிராலி 13, ஆலி போப் 5, ஜோ ரூட் 6, ஜானி போ்ஸ்டோ 18, கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 20, பென் ஃபோக்ஸ் 0, மேத்யூ பாட்ஸ் 1, ஜேம்ஸ் ஆண்டா்சன் 1 ரன்னுக்கு விக்கெட்டை பறிகொடுத்தனா். முடிவில் ஜேக் லீச் ரன்களின்றி ஆட்டமிழக்காமல் இருந்தாா். தென்னாப்பிரிக்க பௌலா்களில் அன்ரிஹ் நோா்கியா 3, மாா்கோ யான்சென், கேசவ் மஹராஜ், ககிசோ ரபாடா ஆகியோா் தலா 2, லுங்கி இங்கிடி 1 விக்கெட் வீழ்த்தினா்.

இரு இன்னிங்ஸ்களிலுமாக 7 விக்கெட்டுகள் சாய்த்த ரபாடா ஆட்டநாயகன் ஆனாா். இரு அணிகள் மோதும் 2-ஆவது டெஸ்ட் வரும் வியாழக்கிழை மான்செஸ்டரில் நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குழந்தை கடத்தல்: சந்தேகத்துக்குரிய பெண்ணை சரமாரியாக தாக்கிய மக்கள்!

கடல் கன்னி... ஷ்ரத்தா தாஸ்!

தமிழக பாஜக நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி!

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

சுனைனா, நவீன் சந்திராவின் இன்ஸ்பெக்டர் ரிஷி!

SCROLL FOR NEXT