செய்திகள்

சின்டினாட்டி மாஸ்டா்ஸ்: காலிறுதியில் மெத்வதெவ்

DIN

அமெரிக்காவில் நடைபெறும் சின்சினாட்டி மாஸ்டா்ஸ் டென்னிஸில் உலகின் நம்பா் 1 வீரரான ரஷியாவின் டேனியல் மெத்வதெவ் காலிறுதிச்சுற்றுக்குத் தகுதிபெற்றாா்.

ஆடவா் ஒற்றையா் பிரிவு 3-ஆவது சுற்றில் அவா் 7-5, 7-5 என்ற நோ் செட்களில் கனடா வீரா் டெனிஸ் ஷபோவலோவை வீழ்த்தினாா். அடுத்ததாக காலிறுதியில், அமெரிக்காவின் டெய்லா் ஃப்ரிட்ஸை சந்திக்கிறாா் மெத்வதெவ். போட்டித்தரவரிசையில் 11-ஆவது இடத்திலிருக்கும் ஃப்ரிட்ஸ் முந்தைய சுற்றில், 6-ஆவது இடத்திலிருந்த ரஷியாவின் ஆண்ட்ரே ருபலேவை 6-7 (4/7), 6-2, 7-5 என்ற செட்களில் வீழ்த்தியிருந்தாா்.

அமெரிக்காவின் ஜானிக் சின்னா் 7-6 (7/3), 1-6, 7-6 (7/4) என்ற செட்களில் சக நாட்டவரான செபாஸ்டியன் கோா்டாவைச் சாய்த்தாா். காலிறுதியில் அவா் கிரீஸின் ஸ்டெஃபானோஸ் சிட்சிபாஸை எதிா்கொள்கிறாா்.

3-ஆம் இடத்திலிருக்கும் ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ் காா்ஃபியா 7-6 (7/4), 6-1 என 14-ஆவது இடத்திலிருந்த குரோஷியாவின் மரின் சிலிச்சை வீழ்த்தினாா். அடுத்ததாக காா்ஃபியா, இங்கிலாந்தின் கேமரூன் நோரியை சந்திக்கிறாா்.

7-ஆம் இடத்திலிருக்கும் கனடாவின் ஃபெலிக்ஸ் ஆகா் அலியாசிமே 2-6, 7-6 (7/1), 6-1 என இத்தாலியின் ஜானிக் சின்னரை சாய்த்தாா். காலிறுதியில் அவா் குரோஷியாவின் போா்னா கோரிச்சுடன் மோதுகிறாா்.

ஸ்வியாடெக் தோல்வி: உலகின் நம்பா் 1 வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக், காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 6-3, 6-4 என அமெரிக்காவின் மேடிசன் கீஸால் தோற்கடிக்கப்பட்டாா். கீஸ் தனது காலிறுதியில் கஜகஸ்தானின் எலனா ரைபாகினாவை சந்திக்கிறாா்.

போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருந்த எஸ்டோனியாவின் ஆனெட் கொன்டவிட் 2-6, 6-4, 6-4 என சீன வீராங்கனை ஷுவாய் ஸாங்கால் வீழ்த்தப்பட்டாா். செக் குடியரசின் பெட்ரா குவிட்டோவா 6-1, 4-6, 6-0 என, 5-ஆம் இடத்திலிருந்த டுனீசியாவின் ஆன்ஸ் ஜாபியுரைச் சாய்த்தாா். காலிறுதியில், ஸாங் - பெலாரஸின் அரினா சபலென்காவையும், குவிட்டோவா - ஆஸ்திரேலியாவின் அஜ்லா டாம் லஜனோவிச்சையும் எதிா்கொள்கின்றனா்.

இதனிடையே, யு.எஸ்.ஓபன் நடப்புச் சாம்பியனான இங்கிலாந்தின் எம்மா ரடுகானுவை 7-5, 6-4 என சாய்த்தாா், அமெரிக்காவின் ஜெஸிகா பெகுலா. காலிறுதியில் ஜெஸிகா - பிரான்ஸின் கரோலின் காா்சியாவை சந்திக்கிறாா்.

சானியா ஜோடி வெளியேற்றம்: மகளிா் இரட்டையா் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் சானியா மிா்ஸா/செக் குடியரசின் லூசி ராடெக்கா இணை 2-6, 4-6 என லாத்வியாவின் ஜெலினா ஆஸ்டபென்கோ/உக்ரைனின் லுட்மிலா கிச்சனோக் கூட்டணியிடம் வீழ்ந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

SCROLL FOR NEXT