செய்திகள்

ஆசியக் கோப்பை டி20: தொலைக்காட்சி வர்ணனையாளர்கள் அறிவிப்பு

19th Aug 2022 04:23 PM

ADVERTISEMENT

 


ஆசியக் கோப்பை டி20 போட்டிக்கான தொலைக்காட்சி வர்ணனையாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளார்கள்.

ஆசிய கிரிக்கெட் கவுன்சில், ஆசியக் கோப்பைப் போட்டியை 1984 முதல் நடத்தி வருகிறது. 50 ஓவர், டி20 என இரு வகைகளிலும் இப்போட்டி நடைபெறும். இந்திய அணி ஆசியக் கோப்பை ஏழு முறை வென்றுள்ளது.

2022 ஆசியக் கோப்பைப் போட்டி இலங்கையில் நடைபெறுவதாக இருந்தது. இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மற்றும் மக்களின் தொடர் போராட்டங்கள் காரணமாக இலங்கைக்குப் பதிலாக ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை டி20 போட்டி நடைபெறுகிறது. ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை நடைபெறவுள்ள போட்டியில் ஆகஸ்ட் 28 அன்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

ADVERTISEMENT

இந்தியா, பாகிஸ்தான், தகுதிச்சுற்று அணி என மூன்று அணிகள் குரூப் ஏ பிரிவிலும் இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகள் குரூப் பி பிரிவிலும் இடம்பெற்றுள்ளன. இரு பிரிவுகளிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றில் மோதவுள்ளன. சூப்பர் 4 சுற்றில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள், செப்டம்பர் 11 அன்று துபையில் நடைபெறும் இறுதிச்சுற்றில் மோதுகின்றன. அனைத்து ஆட்டங்களும் இந்திய நேரம் இரவு 7.30 மணிக்குத் தொடங்குகின்றன. 

இந்நிலையில் ஆசியக் கோப்பை டி20 போட்டி - ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி, டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி-யில் ஒளிபரப்பாகிறது. இப்போட்டிக்கான வர்ணனையாளர்களின் பெயர்களை ட்விட்டரில் அறிவித்துள்ளது ஸ்டார் நிறுவனம்.

ஆங்கில வர்ணனையாளர்களாக ஸ்காட் ஸ்டைரிஸ், சஞ்சய் மஞ்ச்ரேக்கர், ரவி சாஸ்திரி, கெளதம் கம்பீர், இர்ஃபான் பதான், வாசிம் அக்ரம், வக்கார் யூனுஸ், அர்னால்ட், அதர் அலி கான், தீப் தாஸ்குப்தா ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள். 

ADVERTISEMENT
ADVERTISEMENT