செய்திகள்

முதல் ஒருநாள்: நியூசிலாந்தை வீழ்த்திய மே.இ. தீவுகள் அணி

18th Aug 2022 02:26 PM

ADVERTISEMENT

 

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

பிரிட்ஜ்டவுனில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 45.2 ஓவர்களில் 190 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. கேப்டன் கேன் வில்லியம்சன் அதிகபட்சமாக 34 ரன்கள் எடுத்தார். அகேல் ஹுசைன், அல்ஸாரி ஜோசப் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தார்கள். 

மேற்கிந்தியத் தீவுகள் அணி, 39 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஷமர் புரூக்ஸ் 79 ரன்கள் எடுத்தார். 

ADVERTISEMENT

மேற்கிந்தியத் தீவுகள் அணி, 2014-க்குப் பிறகு நியூசிலாந்து அணியை ஒருநாள் கிரிக்கெட்டில் தோற்கடித்துள்ளது. மேலும் கடந்த 10 ஒருநாள் ஆட்டங்களில் மே.இ. தீவுகள் அணி முதல்முறையாக வெற்றி பெற்றுள்ளது. மார்ச் 2020-க்குப் பிறகு முதல்முறையாக ஒருநாள் ஆட்டத்தில் அனைத்து விக்கெட்டுகளையும் நியூசிலாந்து அணி இழந்துள்ளது. 

2-வது ஆட்டம் இதே மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது. 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT