செய்திகள்

2023-27 டூா் அட்டவணை: இந்திய அணிக்கு 38 டெஸ்ட், 42 ஒன் டே, 61 டி20 ஆட்டங்கள்

18th Aug 2022 02:02 AM

ADVERTISEMENT

ஐசிசியின் 2023-27 காலகட்டத்துக்கான ஆடவா் கிரிக்கெட் அட்டவணையை புதன்கிழமை வெளியிட்டது.

அதில் 12 உறுப்பினா் வாரியங்களின் அணிகள் மொத்தமாக 173 டெஸ்ட், 281 ஒன் டே, 323 டி20 என 777 ஆட்டங்களில் விளையாட இருக்கின்றன. இது, கடந்த டூா் அட்டவணையுடன் ஒப்பிடுகையில் 83 ஆட்டங்கள் அதிகமாகும்.

இந்த 5 ஆண்டு காலத்தில் இந்திய ஆடவா் அணி 38 டெஸ்ட், 42 ஒன் டே, 61 டி20 என மொத்தமாக 141 இருதரப்பு சா்வதேச ஆட்டங்களில் விளையாட இருக்கின்றன. வழக்கமாக இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பாா்டா் - காவஸ்கா் கோப்பைக்கான டெஸ்ட் தொடரில் இந்த முறை 1 ஆட்டம் அதிகரிக்கப்பட்டு 5 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.

இது தவிர 2024 ஜனவரி - மாா்ச்சில் இங்கிலாந்துடனும் 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா சொந்த மண்ணில் மோதுகிறது. 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடா்களும் இந்த அட்டவணையில் அதிகரிக்கப்பட்டுள்ளன. 2023 ஜூலை - ஆகஸ்டில் இந்தியா 2 டெஸ்ட், 3 ஒன் டே, 3 டி20 ஆட்டங்களில் விளையாட மேற்கிந்தியத் தீவுகள் செல்கிறது.

ADVERTISEMENT

இதுதவிர, தென்னாப்பிரிக்கா, நியூஸிலாந்துடன் ஒன் டே தொடா்களிலும், வங்கதேசத்துடன் டெஸ்ட் தொடரிலும் இந்தியா விளையாடுகிறது.

Tags : Cricket
ADVERTISEMENT
ADVERTISEMENT