செய்திகள்

தீபக் சஹார் அபார பந்துவீச்சு: தடுமாறும் ஜிம்பாப்வே அணி

18th Aug 2022 03:00 PM

ADVERTISEMENT

 

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணி 25 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 95 ரன்கள் எடுத்துத் தடுமாறி வருகிறது.

இந்திய அணி ஜிம்பாப்வேவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. இன்று ( ஆகஸ்ட் 18) தொடங்கும் ஒருநாள் தொடர் ஆகஸ்ட் 22-ல் நிறைவடைகிறது. சமீபத்தில் வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரை 2-1 எனவும் ஒருநாள் தொடரை 2-1 எனவும் ஜிம்பாப்வே ஜெயித்திருந்தது. 

ஹராரேவில் நடைபெறும் முதல் ஒருநாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் கே.எல். ராகுல், ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் ஷுப்மன் கில், இஷான் கிஷன், சிராஜ் போன்றோர் இடம்பெற்றுள்ளார்கள். இந்திய அணிக்காகக் கடந்த பிப்ரவரி மாதம் கடைசியாக விளையாடிய தீபக் சஹார், காயத்திலிருந்து மீண்டு வந்து இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார்.

ADVERTISEMENT

ஜிம்பாப்வே அணி ஆரம்பம் முதல் இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள சிரமப்பட்டது. முதல் நான்கு பேட்டர் ஒற்றை இலக்க ரன்களுக்கு ஆட்டமிழந்தார்கள். இதனால் 101. ஓவர்களில் 31 ரன்களுக்கு முதல் 4 விக்கெட்டுகளை இழந்தது. தீபக் சஹார் சிறப்பாகப் பந்துவீசி முதல் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

ஜிம்பாப்வே அணி 25 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 95 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது. கேப்டன் ரெஜிஸ் 33 ரன்களுடனும் லூக் ஜாங்வே 1 ரன்னுடனும் களத்தில் உள்ளார்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT