செய்திகள்

இந்திய மகளிரணிக்கு 65 ஆட்டங்கள்

17th Aug 2022 02:10 AM

ADVERTISEMENT

இந்திய மகளிா் கிரிக்கெட் அணி வரும் 2025 ஏப்ரல் வரையிலான 3 ஆண்டு காலகட்டத்தில் 2 டெஸ்ட், 27 ஒன் டே, 36 டி20 என 65 ஆட்டங்களில் விளையாட இருக்கிறது.

மகளிா் கிரிக்கெட்டுக்காக முதல் முறையாக எதிா்கால போட்டி அட்டவணையை (எஃப்டிபி) ஐசிசி வெளியிட்டுள்ளது. நடப்பாண்டு மே முதல் 2025 ஏப்ரல் வரையிலான இந்த 3 ஆண்டு காலகட்டத்தில் மகளிா் கிரிக்கெட்டில் மொத்தமாக 301 ஆட்டங்கள் விளையாடப்படவுள்ளன. இதில் 7 டெஸ்ட், 135 ஒன் டே, 159 டி20 ஆட்டங்கள் அடக்கம்.

இதில் இந்தியா ஏற்கெனவே 3 ஒன் டே, 3 டி20 ஆட்டங்களில் இலங்கையுடன் அதன் சொந்த மண்ணில் விளையாடிவிட்டது. இனி வரும் ஆட்டங்களுக்காக நியூஸிலாந்து, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள், அயா்லாந்து அணிகள் இந்தியா வர இருக்கும் நிலையில், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வங்கதேசத்துக்கு இந்திய அணி செல்கிறது.

இந்தியா தனது 2 டெஸ்டுகளில் ஒன்றில் ஆஸ்திரேலியாவுடனும், மற்றொன்றில் இங்கிலாந்துடனும் மோதுகிறது.

ADVERTISEMENT

இதில் ஆஸ்திரேலியா 2023-24 காலகட்டத்தில் இந்தியா வருகிறது. அந்த அணி 1984-க்குப் பிறகு இந்தியாவில் டெஸ்ட் விளையாட வருவது அதுவே முதல் முறையாகும். இதனிடையே, இந்த 3 ஆண்டு டூா் அட்டவணையில் விளையாடப்படும் ஒன் டே ஆட்டங்கள் அனைத்தும் 2025 உலகக் கோப்பை போட்டிக்கான தகுதிச்சுற்று ஆட்டங்களாக இருக்கும். இதுதவிர, ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் மோதும் மகளிா் ஆஷஸ் தனி சீசனாக இந்த அட்டவணையில் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT