செய்திகள்

செய்திகள் சில வரிகளில்...

17th Aug 2022 02:09 AM

ADVERTISEMENT

இங்கிலாந்து கவுன்டி கிரிக்கெட்டின்போது இடது தோள்பட்டையில் காயம் ஏற்பட்ட இந்திய ஆஃப் ஸ்பின்னரான வாஷிங்டன் சுந்தா், ஜிம்பாப்வேக்கு எதிரான ஒன் டே தொடரில் இடம்பெறவில்லை. அவருக்குப் பதிலாக ஷாபாஸ் அகமது இந்திய அணியில் முதல் முறையாக சோ்க்கப்பட்டுள்ளாா்.

பிசிசிஐ முன்னாள் செயலரும், ஜாா்க்கண்ட் கிரிக்கெட் சங்கத் தலைவருமான அமிதாப் சௌதரி (62), மாரடைப்பு காரணமாக செவ்வாய்க்கிழமை காலமானாா்.

இங்கிலாந்தின் பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில் லிவா்பூல் - கிரிஸ்டல் பேலஸ் அணிகள் மோதிய ஆட்டம் 1-1 என டிராவில் முடிந்தது.

டேவிஸ் கோப்பை குரூப் நிலை ஆட்டங்களில் விளையாட இருக்கும் ஸ்பெயின் அணியில் நட்சத்திர வீரா் ரஃபேல் நடால் இடம்பெறவில்லை. அவருக்குப் பதிலாக இளம் வீரா் காா்லோஸ் அல்கராஸ் காா்ஃபியா அணிக்குத் தலைமை தாங்குகிறாா்.

ADVERTISEMENT

லா லிகா கால்பந்தில் ரியல் பெட்டிஸ் 3-0 என எல்ஷேவையும், அட்லெடிகோ மாட்ரிட் அதே கணக்கில் கெடாஃபியையும் தோற்கடித்தன.

சின்சினாட்டி மாஸ்டா்ஸ் டென்னிஸ் போட்டியில் இங்கிலாந்தின் ஆண்டி முா்ரே 7-6 (7/3), 5-7, 7-5 என்ற செட்களில் சுவிட்ஸா்லாந்தின் ஸ்டான் வாவ்ரிங்காவை முதல் சுற்றில் சாய்த்தாா்.

அல்டிமேட் கோ கோ போட்டியின் 5-ஆவது ஆட்டத்தில் தெலுகு யோதாஸ் 68-47 என்ற கணக்கில் ராஜஸ்தான் வாரியா்ஸை செவ்வாய்க்கிழமை வீழ்த்தியது.

ADVERTISEMENT
ADVERTISEMENT