செய்திகள்

ஜிம்பாப்வே ஒருநாள் தொடர்: வாஷிங்டன் சுந்தர் விலகல், புதிய வீரர் சேர்ப்பு!

16th Aug 2022 02:55 PM

ADVERTISEMENT

 

ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக புதிய வீரரைத் தேர்வு செய்துள்ளது பிசிசிஐ.

இந்திய அணி ஜிம்பாப்வேவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. ஆகஸ்ட் 18-ல் தொடங்கும் ஒருநாள் தொடர் ஆகஸ்ட் 22-ல் நிறைவடைகிறது. சமீபத்தில் வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரை 2-1 எனவும் ஒருநாள் தொடரை 2-1 எனவும் ஜிம்பாப்வே ஜெயித்திருந்தது. 

கே.எல். ராகுல் தலைமையிலான இந்திய அணி இத்தொடரில் பங்கேற்கிறது. தமிழக ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் இந்திய அணியில் இடம்பெற்றிருந்தார். எனினும் இங்கிலாந்தில் கவுன்டி கிரிக்கெட்டில் விளையாடியபோது அவருக்குக் காயம் ஏற்பட்டது. வாஷிங்டன், ஃபீல்டிங் செய்தபோது கீழே விழுந்ததில் இடது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதால் உடனடியாக ஓய்வறைக்கு அவர் திரும்பினார். முன்னெச்சரிக்கையாக அந்த ஆட்டத்தில் அவர் மேலும் பங்கேற்கவில்லை. 

ADVERTISEMENT

இந்நிலையில் தோள்பட்டைக் காயம் காரணமாக ஜிம்பாப்வே ஒருநாள் தொடரிலிருந்து வாஷிங்டன் சுந்தர் விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக 27 வயது ஷாபாஸ் அகமது இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். பெங்கால் அணியைச் சேர்ந்த ஷாபாஸ் அகமது, கடந்த ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணிக்காக விளையாடினார். ரூ. 2.40 கோடிக்குத் தேர்வு செய்தது. 2022 ஐபிஎல் பருவத்தில் 16 ஆட்டங்களில் 219 ரன்களும் 4 விக்கெட்டுகளும் எடுத்தார் ஷாபாஸ் அகமது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT