செய்திகள்

ஐஎல்டி20: பிரபல வீரர்களைத் தேர்வு செய்த நைட்ரைடர்ஸ் அணி

DIN

ஐஎல்டி20 போட்டியில் அபுதாபி நைட்ரைடர்ஸ் அணியில் விளையாடவுள்ள வெளிநாட்டு வீரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. 

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒரு புதிய டி20 லீக் போட்டி 2023 ஜனவரியில் தொடங்கப்படவுள்ளது. சர்வதேச லீக் டி20 என்கிற ஐஎல்டி20 போட்டியில் அதிகச் சம்பளம் தரப்படுவதால் அதில் இணைந்துகொள்ள பிரபல வீரர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். துபை, அபுதாபி, ஷார்ஜாவில் ஆட்டங்கள் நடைபெறும். 

ரிலையன்ஸ் (ஐபிஎல் மும்பை அணி நிர்வாகம்), கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கேப்ரி குளோபல், ஜிஎம்ஆர், லேன்சர் கேபிடல், அதானி ஸ்போர்ட்ஸ்லைன் என ஆறு அணிகளின் உரிமையாளர்கள் வீரர்களைத் தேர்வு செய்யும் பணியில் உள்ளார்கள். இப்போட்டியில் ஒவ்வொரு அணியிலும் 18 வீரர்கள் இருப்பார்கள். அவர்களில் நால்வர் யூஏஇ மற்றும் இருவர் அசோசியேட் நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். எனவே அனைத்து அணிகளும் 14 வெளிநாட்டு வீரர்களைத் தேர்வு செய்துகொள்ளலாம். ஒவ்வொரு ஆட்டத்திலும் 9 வெளிநாட்டு வீரர்களுக்கு அனுமதி உண்டு. 

மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் எம்.ஐ. எமிரேட்ஸ் (மை எமிரேட்ஸ் என அழைக்கவேண்டும்) எனத் தனது ஐஎல்டி20 அணிக்குப் பெயர் சூட்டியுள்ளது. முதல் வருடப் போட்டிக்கான 14 வெளிநாட்டு வீரர்களையும் தேர்வு செய்துள்ளது எம்ஐ எமிரேட்ஸ். வீரர்களின் பட்டியல்: பிராவோ, பொலார்ட், நிகோலஸ் பூரன், ஆண்ட்ரே பிளெட்சர் (மே.இ. தீவுகள்), போல்ட் (நியூசிலாந்து), இம்ரான் தாஹிர் (தென்னாப்பிரிக்கா), நஜிபுல்லா ஸத்ரான், ஜாகிர் கான், ஃபஸல்ஹஹ் ஃபரூகி (ஆப்கானிஸ்தான்), சமித் படேல், வில் ஸ்மீட், ஜார்டன் தாம்ப்சன் (இங்கிலாந்து), பிராட் வீல் (ஸ்காட்லாந்து), பாஸ் டி லீட் (நெதர்லாந்து).

இந்நிலையில் அபுதாபி நைட்ரைடர்ஸ் அணியின் வெளிநாட்டு வீரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதுவரை தேர்வு செய்யப்பட்டுள்ள வீரர்கள்:

சுநீல் நரைன், ரஸ்ஸல், அகேல் ஹூசைன், ரேமான் ரீஃபர், கென்னர் லூயிஸ் (மே.இ. தீவுகள்), ஜானி பேர்ஸ்டோ (இங்கிலாந்து), பால் ஸ்டிர்லிங் (அயர்லாந்து), லஹிரு குமாரா, சரித் அசலங்கா, சீக்குக் பிரசன்னா (இலங்கை), காலின் இங்க்ரம் (தென்னாப்பிரிக்கா), அலி கான் (அமெரிக்கா), பிராண்டன் குளோவர் (நெதர்லாந்து).
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தி பாய்ஸ் - டிரெய்லர்

பாஜகவில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள்

ஆரம்பிக்கலாங்களா...

மக்கள் நீதி மய்யம் தலைவர் தேர்தல் பிரசாரம் - புகைப்படங்கள்

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

SCROLL FOR NEXT